Wednesday, December 5, 2007

யானைக்குத் தூக்கு!







அபராதம் கட்டிய குரங்கு!





1905-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்து. சிம்பன்ஸி குரங்கு ஒன்று பல்வேறு சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காட்டியது. இதில் ஒரு கட்டமாக சிகரெட் பிடித்துக் காட்டியது. மக்கள் ஆராவாரத்துடன் கைதட்டி களைந்து சென்றுவிட்டனர். ஆனால் அந்தக் குரங்குக்குத்தான் அபராதத் தண்டனை விதிக்கப்பட்டது. பொது இடத்தில் புகை பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதாக குரங்கு மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் அபராதம் விதித்தது. சர்க்கஸ் நிறுவனத்தினர் அந்தத் தொகையைக் கட்டினர்.



நாய்க்கு ஆயுள்தண்டனை!




1924-ம் ஆண்டு அமெரிக்கவின் பென்சில்வேனியா மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் கிரிஃபோர்ட் பின்சாட்டியா. இவர் மனைவி அழகான பூனை ஒன்றை வளர்த்து வந்தார். ஒருநாள் திடீரென இந்தப் பூனை வீட்டை விட்டு வெளியில் ஓடியது. காத்திருந்ததுபோல பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்த நாய் ஒன்று பூனையைக் கவ்விக் கொன்றுவிட்டது. வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. நாய்க்கு ஆதரவாகச் சாட்சி சொல்ல யாரும் வரவில்லை. வாதாடவும் வழக்கறிஞர் வரவில்லை. நாய்க்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. சிறைக் கைதிகளுக்கு எண்கள் கொடுப்பதுபோல இந்த நாய்க்கும் கொடுக்கப்பட்டிருந்தது. இ2559 என்று அழைத்தால் நாய் ஓடிப் போய் வேனில் ஏறிக்கொள்ளும். பிலடெல்பியா பகுதியில் புதிய சிறைச்சாலை கட்டியபோது, எல்லாக் கைதிகளும் கட்டட வேலை பார்த்தபோது நாய் பாதுகாப்பு வேலையில் ஈடுபட்டது. ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து அந்தச் சிறைச்சாலையிலேயே இறந்துபோனது.





யானைக்குத் தூக்கு!



1916-ம் ஆண்டு டென்னெஸ் மாகாணத்தில் உள்ள கிங்ஸ்போர்ட் எனும் ஊரில் சர்க்கஸ் கம்பெனி ஒன்று இருந்தது. இக்குழுவில் மேரி என்கிற யானை ஒன்றும் அடக்கம். மேரியைப் பராமரிக்கப் புதிய பாகன் ஒருவன் நியமிக்கப்பட்டான். ஒருநாள் யானை பழக்கடை பக்கம் போனது. பாகன் கடைக்குப் போகவிடாமல் தடுத்ததுடன் அங்குசத்தால் யானையையும் குத்திவிட்டான். கோபம் தலைக்கேறிய யானை, பாகனைத் தூக்கிப்போட்டு மிதித்து கொன்றே விட்டது. வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. சர்க்கஸ் நிறுவனத்தார் யானையின் பக்கமே இருந்தனர். எப்படியும் அதைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று எவ்வளவோ போராடினார்கள். ஆனால் முடியவில்லை. யானைக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தது. நூறு டன் எடை தூக்கக்கூடிய ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, யானையின் கழுத்தில் சங்கிலி கட்டி, தூக்குத் தண்டனை கொடுக்க முயற்சித்தபோது சங்கிலி அறுந்துவிட்டது. பிறகு பெரிய சங்கிலியைப் போட்டு ஐந்து அடி வரை தூக்கி தண்டனையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

3 comments:

துளசி கோபால் said...

தலைப்பைப் பார்த்துட்டுத் தயங்கி இந்தப் பக்கம் வராம ரொம்ப நேரம் இருந்தேன்.

அப்புறம் கொஞ்சம் தைரியம் வரவச்சுக்கிட்டு வந்து பார்த்தேன்.

ப்ச்.....பாவம் அந்த யானை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பில் கிளிங்டனின் கிளுகிளுப்புக் கேட்க 40 மில்லியன் டாலர் செலவு செய்த தேசமல்லவா?? இப்படிக் கோமாளித்தனமும் செய்யும்.

த.அரவிந்தன் said...

கோமாளித்தனமான கொடியர்கள். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.