Monday, December 3, 2007

கத்தியோடு ஜனாதிபதி!





கொட்டாவியை
விரட்டும்
மிட்டாய்கள்!
(3.12.2007)



இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தார் ஒருவர். முதலில் சட்னி ஊற்றினார் சர்வர். இரண்டாவதாகச் சாம்பாரை ஊற்றுகிறபோது சட்னி மீதே ஊற்றினார். சாப்பிட்டவர், "சட்னி மேலயே ஊத்துறீங்களே... ஓரமாக ஊத்த வேண்டியதுதானே...'' என்றார். "என்ன சார், ரெண்டும் ஒன்றாகத்தானே வயித்துக்குள்ள போகப்போகுது. சும்மா சாப்பிடுங்க சார்'' என்றார் சர்வர். சாப்பிட்டவருக்குக் கோபம். சாப்பிட்டு முடித்துப் போகிறபோது சட்னி வாளியில், சாம்பார் வாளியைக் கவிழ்த்து வைத்துவிட்டு சென்றார். வாய் திறக்க முடியாமல் நின்றார் சர்வர்.


***

மூதாட்டி ஒருவரின் வீட்டில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார் மாறுவேடத்திலிருந்த சத்ரபதி சிவாஜி. எடுத்துச் சாப்பிட முற்பட்டபோது, சூடாக இருந்ததால் சாதம் கையைச் சுட்டது சிவாஜிக்கு. கையை ஊதிக்கொண்டே இருந்த சிவாஜியைப் பார்த்து மூதாட்டி சொன்னாள்: " நீ ஊதுவதைப் பார்க்கிறபோது சிவாஜி செய்வதுபோலவே இருக்கிறது'' என்றார். சிவாஜிக்கு அதிர்ச்சி. மூதாட்டி கண்டுபிடித்துவிட்டாளோ என அதிர்ந்தபடியே என்னவெனக் கேட்டார். "தட்டின் நடுவே இருந்த சோற்றில் கை வைத்துக் சுட்டுக்கொண்டாய். தட்டின் ஓரத்தில் உள்ள சாதத்தை எடுத்துச் சாப்பிட்டால் கை சுடுமா? சிவாஜியும் அப்படித்தான் எடுத்த எடுப்பிலேயே பெரிய கோட்டைகளைப் பிடிக்கத் துடிக்கிறார். சிறிய சிறிய கோட்டைகளாகப் பிடித்து போனால்தான் சரியாக இருக்கும்'' என்றிருக்கிறாள் மூதாட்டி. உணர்ந்த அறிவின்படி நடந்துகொண்டார் சிவாஜி.


***

வின்ஸ்டன் சர்ச்சில் பேசுகிறார் என்றால் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இது பற்றி சர்ச்சிலிடம் அவரது நண்பர், "கூடுகிற கூட்டத்தைப் பார்த்து உங்களுக்குப் பெருமையாக இல்லையா?'' என்று கேட்டார். வின்ஸ்டன் சொன்னார்: " என்னைத் தூக்கில் போடுகிறார்கள் என்று சொன்னால் இதைவிட கூட்டம் அதிகமாக வரும்'' என்றார்.

***

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அறையில் எப்போதும் ஒரு பெரிய கத்தி இருக்கும். அந்தக் கத்தி வருகிறவர்களை மிரட்டுவதற்காக என்று நினைத்தால் லிங்கனைப் பற்றி உங்களுக்குத் தெரியாது என்று அர்த்தம். சரி... இப்போது இது தேவையில்லாத விஷயம். லிங்கன் இளைஞனாக இருந்தபோது ஒருவர் அந்தக் கத்தியைக் கொடுத்து, "உங்களைவிட அசிங்கமாக யாராவது இருந்தால் கொடுத்துவிடுங்கள்'' என்று கொடுத்தாராம். அந்தக் கத்தியைத்தான் லிங்கன் அறையில் வைத்திருந்தாராம். பிற்காலத்தில் அந்தக் கத்தியை அவரது மந்திரிகளில் ஒருவருக்குக் கொடுத்துவிட்டதாகக் கேள்வி.

***

No comments: