தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(2.12.2007)
செய்தி:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உள்ள விஷயம்:
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக் காலத்தை ஆறரை ஆண்டுகளாக மத்திய அரசு நீட்டிக்கப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது முதலமைச்சர் கருணாநிதி மாணவர்களின் பிரதிநிதிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்குத் தானே கடிதம் எழுதுவதாகவும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாகப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தபோதிலும் இந்நாள் வரை போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். முதலமைசóசர் கருணாநிதி மாணவர்களிடம் உறுதியளித்தவாறு பிரதமருக்கும் மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்தப் பிரச்சினை குறித்து குழு நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் முடிவினை எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்நிலையில் மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகக் கல்லூரிகளுக்குத் திரும்பி தங்கள் படிப்பினைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.3}ந்தேதிக்குள் மாணவர்கள் கல்லூரிகளுக்குத் திரும்பாவிட்டால் அன்று முதல் கல்லூரிகளையும் விடுதிகளையும் தற்காலிகமாக மூடுவதைத் தவிர அரசுக்கு வேறு வழி இல்லை என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கேள்வி:
வேறு வழி இல்லை என்றால் என்ன அர்த்தம்? ஏன் தற்காலிகமாக மூடப் போகிறீர்கள். நிரந்தரமாகவே மூடிவிடுங்களேன். குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்ன குழந்தைகளா? (பா.ம.க.வினர் புலம்பல் அடிப்படையில் எழுதப்படுவது... தொட்டிலை ஆட்டிவிட்டு... ) இராணி மேரி கல்லூரி இடிப்பதற்கு ஜெயலலிதா ஆட்சியில் முன்வந்தபோது மாணவிகள் அன்று உள்ளிருப்புப் போராட்டம் பல நாட்கள் நடத்தினார்கள். அக்கல்லூரி மாணவிகளை நேராகவே சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தார் ஸ்டாலின். இதை அதிமுக ஆட்சி பெரிதாக்கி, அத்துமீறி கல்லூரியில் நுழைந்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கை பற்றிகூட கவலைப்படாமல் அந்த மாணவிகளுக்கு ஆதரவு நல்கியது ஸ்டாலின் மட்டுமல்ல; திமுக தலைவர் கருணாநிதியும்தான். ஆனால் இன்று அவர்களுடைய ஆட்சி. அதுவும் மத்திய அரசை எதிர்த்துத்தான் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் இன்னும் தெளிவான ஒரு முடிவு எட்óடப்படவில்லை. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளபடி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருப்பதும், குழுவின் முடிவுக்குக் காத்திருக்கிறோம் என்று அன்புமணி ராமதாஸ் விளக்கம் கொடுத்திருப்பதும் உண்மையாகவே இருக்கலாம். குழு முடிவு நாளைக்கே வேறுவிதமாக வந்துவிட்டால் என்ன ஆவது என்று மாணவர்கள் பயப்படுகிறார்கள். கடந்த காலங்களில் குழு போட்டு அவை எடுத்த முடிவுகளை எல்லாம் மாணவர்கள் அறியாமலா இருப்பார்கள்? இதனால் போராட்டத்தைத் முடித்துக் கொள்வதற்குத் தயங்கலாம். இóப்படிச் சொல்வதால் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் அவர்கள் படிப்பைப் பாழ்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லவரவில்லை. எந்தப் போராட்டமுமே, அளிக்கக்கூடிய பயன்பாடுகளைப் பாழ்படுத்திவிட்டும், அன்றாட நடைமுறைகளைச் சீர்குலைத்துவிட்டும் நடத்துகிற போராட்டமாக இருக்கக்கூடாது என்கிற எண்ணம்தான் நம்முடையதும். ஆனால் இதில் நமக்கு ஏற்படும் ஆதங்கம் திடீரென்று இவ்வளவு ஆவேசமாக மிரட்டும் தொனியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது. மருத்துவக் கல்லூரி மாணவர்களை தமிழக அமைச்சர் தூண்டிவிடுகிறார் என்று ராமதாஸ் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தாரே அதற்குப் பயந்துதானே? ஒரு நாள் விட்டு ஒரு நாள் தமிழக அரசைக் குறை கூறி ராமதாஸ் அறிக்கை விடுகிறார். மக்களுக்குத் தேவையானவற்றைச் சொன்னால் கருணாநிதிக்குக் கோபம் வருகிறது. தமிழக அரசுக்குக் கோபம் வருகிறது என்றெல்லாம் ஆணித்தரமாகவே ராமதாஸ் சொல்கிறார். திமுக அரசுக்கு ஏன் அந்தத் தைரியம் வர மறுக்கிறது. உங்கள் நிலைபாட்டைத் தெளிவுப்படுத்த வேண்டியதுதானே... அதைவிட்டு ராமதாஸ் மனம் நோகாமலிருக்க அன்புமணõ ராமதாஸýக்குச் சாதகமாக நடப்பதுபோல் மாணவர்களை மிரட்டி அறிக்கை விடுகிறீர்களே .... என்ன உங்கள் மிரட்டல் கூட்டணி தர்மம்! வாழ்க.. அடுத்த தேர்தல் வரை!
No comments:
Post a Comment