Sunday, December 9, 2007

கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் கலாட்டாக்கள்!

"முதலாவதாக கலக்கப் போகும் சாம்பியன் மதுரை முத்து...'

ஒரு பையன் அழுதுக்கிட்டே வந்து அப்பாவிடம் சொன்னான்:
"ராமு அடிச்சிட்டான்ப்பா''
"உங்க வாத்தியார்கிட்ட சொல்லவேண்டியதுதானே..''
"அடிச்சதே ராமு வாத்தியார்தாம்ப்பா..''

கணவன் மனைவிகிட்ட சொல்றார்:
"நேத்து உன்ன மாதிரியே ஒருத்திய பஸ்ல பாத்தேன்.''
"என்ன பண்ணினீங்க..''
"இறங்கி வேற பஸ்ல ஏறிட்டேன்.''

மேடையில் ஒருத்தர் திருக்குறளைப் பற்றி மாபெரும் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னார்: "திருக்குறளில் எல்லாம் காணலாம்''. உடனே கூட்டத்தில் இருந்த ஒரு பொம்பளை எழுந்து "எங்க வீட்டு அண்டாவ காணும். அதுல இருக்கா பாருங்க''ன்னு சொல்லிச்சு.''

"மும்தாஜ் இறந்த ஞாபகார்த்தமா ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினார். நான் இறந்தா என்ன கட்டுவீங்க..'' ன்னு ஒரு மனைவி புருஷன்கிட்ட கேட்டாள், அதுக்கு புருஷன் சொன்னான், "இன்னொரு பொண்ணை கட்டுவேன்.''

சடசடவென இப்படி சிரிப்பு மழையில் நனையவிடும் முத்து எம்.காம் பட்டதாரி. சொந்தவூர் மதுரை மாவட்டத்தில் உள்ள டி.அரசம்பட்டி.
"மிமிக்ரியும் நான் நல்லா பண்ணுவேன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில அதிகமானவங்க மிமிக்ரி பண்றதால நான் ஜோக் மழையில நனைய விடுறேன். ஜோக் எல்லாரும் சொல்லுவாங்க. அதை மக்கள் ரசிக்கிறபடி சொல்லவேண்டும். நான் எங்க ஊர் ஸ்லாங்கில சொல்றப்ப மக்களுக்கு ரொம்ப பிடிக்குது. என்னுடைய ஜோக்குங்கல்லாம் இயல்பானவையாகத்தான் இருக்கும். பேப்பர் படிக்கிறபோது கிடைக்கிற புதுவிஷயத்தை எனக்குத் தகுந்தாற்போல் மாத்தி ஜோக்கா சொல்வேன். பார்த்த, கேட்ட ஜோக்குகளையும் எனக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்வேன்.
"மதுரை வீரன்' படத்துல சித்தன் ரமேஷுக்கு ஃப்ரெண்டா நடிக்கிறேன். இவ்வளவு தூரம் நான் வளர்ந்ததுக்கு முக்கிய காரணமா இருக்கிறவங்க பேராசிரியர் ஞானசம்பந்தன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி இயக்குநர் ராஜ்குமார், எங்க ஊர் மக்கள்'' என்கிறார்.

அடுத்ததா கலக்க வரும் சாம்பியன் கோவை குணா...

"சொந்த வீடு கட்டுறார் எம்.ஆர்.ராதா. காலையில கட்டட வேலை தொடங்க வரும் மேஸ்திரியிடம் எம்.ஆர்.ராதா எப்படிப் பேசுறார்னு பார்ப்போம்..''
(எம்.ஆர்.ராதா குரலில்)
"வாய்...யா மேஸ்திரி.... வேலையெல்லாம் நல்ல்ல்லலா நடக்...குதா..''
"நடக்குதுங்கய்யா..''
"எங்கய்ய்ய்யா நடக்குது..''
"என்னய்யா இப்பிடி சொல்லிட்டீங்க..''
"பின்ன என்னய்ய்ய்யா? சித்தாள எல்லாம் கிகிகிழவியா பிடிச்சுப் போட்டிருக்க. சித்தாளு கிழவியெல்லாம் மூணுமாசத்துல முடிக்க வேண்டிய வேலையை ஆறுமாசமா இழுக்குதுங்கோ... ஏய்.. சித்தாள்ள்ள் கிழவி. உன் பேரு என்ன?''
"அய்யா என்றன் பேரு கருப்பாயிங்கோ..''
"கருப்பாயி ரொம்ப லெங்க்த்தா இருக்கு.... குறைச்சுக்கோ. இனிமே உன் பேரு பப்பி... டேய் மேஸ்திரி... சித்தாளுங்க கலவை கொண்டுப் போகும்போது ஏன் கலவை சிந்துது.. இது என்ன உங்கொப்பன் வீட்டுதுன்னு நினைச்சியா..''
"அய்யா கலவையை மேல தூக்கிட்டுப் போகும்போது சிந்ததானுங்கய்யா செய்யும்.''
"சித்தாளு எல்லோருக்கும் சூட்கேஸ் கொடுக்கச் சொல்லு. அதுல கலவை வைச்சு தூக்கிட்டுப் போகச் சொல்லு... போடா டேய்.''
- இப்படி...எம்.ஆர்.ராதா குரலில் மட்டும் அல்ல, அறுபதுக்கும் மேற்பட்டவர்களின் குரல்களில் அசத்துகிறார் கோவை குணா.

"சின்ன வயசிலிருந்து மிமிக்ரி பண்ணுறதுதான் என் வேலை. இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி பண்ணி காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தேன். இப்ப "கலக்கப் போவது' நிகழ்ச்சியில் கலந்து சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு என் வாழ்க்கையே டோட்டலா மாறிப் போச்சி. டைரக்டர் விக்ரமன் சாரோட "சென்னை காதல்' படத்துல நடிச்சிக்கிட்டிருக்கேன். எனக்கு பெரிய லட்சியம்னா, இப்ப வந்திருக்கிற இடத்தை தக்க வைச்சுக்கணும். மிமிக்ரி பண்ணிப் பண்ணி பழகிப் போயிட்டதால் தனிப்பட்ட பயிற்சி எதுவும் எடுக்கலை. ஒருத்தருடைய வாய்ûஸ மிமிக்ரி பண்றதுக்கு முன்னாடி அவருடைய பாடி லாங்வேஜை பிக்கப் பண்ணிக்கிட்டோம்னா மிமிக்ரி பண்றதுக்கு சிரமம் இருக்காது. என்னைப் பார்த்து என்னுடைய மகள் மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சிருக்குங்க.'' என்கிறார்.

கோவை குணா கலக்கோ கலக்குன்னு கலக்கியதைப் பார்த்தீங்க. அடுத்து கலக்க வர்றார் டேவிட் வடிவேலு.

(வடிவேலு மாதிரி கோண நடை நடந்து வந்து கூழைக்கும்பிடு போட்டபடியே வடிவேலு குரலில் பேசுகிறார் டேவிட்!)
"கறுப்பு சட்டை போட்டுக்கிட்டு... கறுப்பு கண்ணாடியைப் போட்டுக்கிட்டு... அமாவாசை இருட்டுல போயி ஒரு வீட்டு கதவ தட்டுறேன்...ஏன் தட்டுறேன்..?'' (ஆடியன்ûஸ நோக்கி கேட்கிறார்)
"ஏன்னா... அந்த வீட்டுல காலிங் பெல் இல்ல.. அதான் தட்டினேன்... அய்யோ...அய்யோ... வரட்டா''
அசல் வடிவேலுவைப் போலவே இருக்கும் டேவிட் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லை. இவருக்கு சொந்தவூர் மதுரை வாவிடமருதூர்.
"வடிவேலு என்ன உதைக்க தேடிக்கிட்டு இருக்காருன்னு சொல்றீங்களா.. உதைச்சாலும் உதைப்பாரு... அவரை அப்படியே ஃபாலோ பண்ணுறமே கோபம் இருக்காது. ஆனா மதன்பாப் சார், வடிவேலு என்னைப் பாராட்டினதா சொன்னாரு. மதுரையில் டான்ஸ் மாஸ்டர் எஸ்.டி.பவன் என்கிறவரிடம் டான்ஸ் கத்துக்கிட்டேன். அவர்தான் என் முகம் வடிவேலு மாதிரி இருக்குன்னு சொல்லி ஒரு இசை நிகழ்ச்சியில "வாடி பொட்டப் புள்ள வெளிய...என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே'ங்கிற பாட்டுக்கு ஆடவைச்சார். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. அதை அப்படியே புடிச்சுக்கிட்டேன். இப்பவரைக்கும் வடிவேலு சார்தான் சாப்பாடு போடுறாரு. "மதுரை வீரன்' படத்துல நடிக்கிறேன். அதுல ஆட்டோக்காரன் வேடத்தில் நடிக்கிறேன். வடிவேலு மாதிரி நான் இப்ப நடிச்சிக்கிட்டு இருந்தாலும் சினிமாவுல எனக்குன்னு தனி பாணி உருவாக்கணும்ங்கிறதுதான் என் ஆசை.''என்கிறார் டேவிட்.
கிளம்பிட்டான்ய்யா...கிளம்பிட்டான்யா...

டேவிட்டைத் தொடர்ந்து கலக்க வருவது ஈரோடு ஜெகன்.

"கிளாஸ்ல, பழமொழி பத்தி பாடம் நடத்திக்கிட்டு இருந்தாரு வாத்தியார். அப்ப சொன்னார்... ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்னு. அதுக்கு ஒரு மாணவன் சொன்னான்.. அப்ப ஒரு சட்டி குழம்புக்கு?''
"அதைப்போல இன்னொரு கிளாஸ்ல, கஜினி முகம்மது நம் நாட்டின் மீது பலமுறை போர் தொடுத்தார்...ஏன்னு சொல்லு?' என்று ஆசிரியர் கேட்டார். அதுக்கு மாணவன் "கஜினிக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ் சார்''
"கந்தன், கடம்பன், முகுந்தன் போன்றவை ஆண்பால்டா மாணவனேன்னு சொன்னேன், அப்ப சிம்ரன் என்ன பால் சார்னு கேட்குறான்?''
ஆசிரியர்-மாணவர் ஜோக்குகளை அடுக்குவதில் கில்லாடி ஜெகன். சொந்தவூர் திருச்சி. தமிழில் பிஹெச்டி பண்ணிக்கொண்டிருக்கிறார்.
"பள்ளியில படிக்கிற காலத்திலிருந்தே பேச்சுப் போட்டிகளில் கலந்து பல பரிசுகள் வாங்கியிருக்கேன். கமல்ஹாசனுடைய தாயார் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இப்படி மேடையில பேசிக்கிட்டு இருந்த நான், நகைச்சுவைப் பக்கம் தாவி "கலக்கப்போவது' நிகழ்ச்சியில கலக்கிக்கிட்டு இருக்கேன்...''

கடைசியா கலக்க வரும் சாம்பியன் ரோபோ சங்கர்...

(விஜயகாந்த் ரயில்நிலைய அறிவிப்பாளராக இருந்தால் எப்படி அறிவிப்பார் என்கிற கற்பனை)
எல்லாருக்கும் வணக்கம். காலை 6 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் இரண்டாவது ப்ளாட்பாரத்திலிருந்து திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், விருத்தாசலம் வழியாக சென்னை எக்மோர் வரை போகுது. வண்டி கிளம்புறதுக்கு முன்னால சிப்ஸ் வாங்கப் போனேன், பாட்டில்ல தண்ணிப் பிடிக்கப் போனேன்னு சொல்லிட்டு ட்ரெய்ன மிஸ் பண்ணிட்டு வந்து நிக்காதே.. நான் காந்தியா இருக்குறதும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸô இருக்கிறதும் உங்க கையிலதான் இருக்கு வரட்டா..''
விஜயகாந்த் உட்பட பலர் குரலில் மிமிக்ரி பண்ணுவதுடன், ரோபா போல பல சாகசங்கள் செய்யும் ரோபோ சங்கர், எம்.ஏ. படித்துள்ளார்.
"சின்ன வயசிலிருந்து இதுதான் என் தொழில்னு தெரிஞ்சுக்கிட்டேன். பல இசை நிகழ்ச்சிகளில் ரோபோ சாகசம் உட்பட மிமிக்ரியும் பண்ணிக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் என்னை யார் என்று மக்களுக்குத் தெரியாது. இப்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகிட்ட பிறகு என் வாழ்க்கையே மாறிப் போச்சு. "மதுரை வீரன்', "கானல் நீர்' போன்ற படங்களில் நடிச்சிட்டிருக்கிறேன். எனக்கு சினிமா சான்ஸ் கிடைக்கிறதுக்கு முக்கிய காரணம், நானும், அரவிந்தும் சேர்ந்து "ஒரு கிளி உருகுது.. ஒரு கிளி மயங்குது... ஓ..மைனா' பாட்டுக்கு ஆடினதுதான்.''என்கிறார் சங்கர்.
"ஒரு கிளி உருகுது' பாடலுக்கு கதாநாயகனும் கதாநாயகியும் ஆடுகிற காட்சியை ரோபோ சங்கரும், அரவிந்தும் ஆடும்போது சிரிக்காதவர்களே இல்லை. ரோபோ சங்கரை விட குறிப்பாக கதாநாயகி போல ஆடும் அரவிந்த் தான் ரியலி சூப்பர்.

"பரதநாட்டியம் கத்துக்கிட்ட போது, என் கிளாஸ்ல 30 பேரு படிச்சாங்க. அதில் நான் மட்டுதான் ஆண். மத்தவங்க எல்லாம் பெண்கள். அந்தப் பாதிப்பினாலோ என்னவோ நான் இப்ப பெண்போல டான்ஸ் ஆடுறேன். இதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. வீட்டுல எதுவும் சொல்லுறதில்லை.'' என்கிறார்.

-கலக்கோ கலக்குன்னு கலக்கிய இவர்களைத் தேர்ந்தெடுத்து உண்மையிலேயே கலக்க வைத்தவர்கள்- இந்நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ்குமார். நடுவர்கள் சின்னிஜெயந்த், மதன்பாப் மற்றும் தொகுப்பாளர் உமா ரியாஸ்கான்.

1 comment:

சீனு said...

//கணவன் மனைவிகிட்ட சொல்றார்:
"நேத்து உன்ன மாதிரியே ஒருத்திய பஸ்ல பாத்தேன்.''
"என்ன பண்ணினீங்க..''
"இறங்கி வேற பஸ்ல ஏறிட்டேன்.''//

:)))))