Tuesday, December 18, 2007

ஐஸ்க்ரீம் சாப்பிடச் சொல்லி உங்களுக்கு யாரும் அட்வைஸ் செய்யவில்லையா?




சென்னை-600 028 -நாயகி' விஜயலட்சுமி பேட்டி

ஐஸ்க்ரீம் சாப்பிடச் சொல்லி உங்களுக்கு யாரும் அட்வைஸ் செய்யவில்லையா?

யாரும் சொல்லவில்லை. ஆனால் "சென்னை -600 028' படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போறேன் என்று தெரிந்தவுடனேயே இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு குண்டா ஆகட்டுமா என்று கேட்டேன். வேண்டாம் இப்படியே இருங்கள் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டார். இப்போது நானே ஐஸ்க்ரீம் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன்.

டயலாக்கே இல்லாமல் படம் முழுக்க நடிக்க வைத்ததினால் வெங்கட் பிரபு மேல் உங்களுக்குக் கோபம்தானே?

கண்டிப்பாகக் கோபம்தான். "ஹலோ அங்கிள்' என்று ஒரே ஒரு டயலாக்கை மட்டும் பேசியதற்காக பலர் கிண்டல்கூட செய்தார்கள். படம் ரிலீஸôகி கிடைத்திருக்கிற ரெஸ்பான்ûஸப் பார்த்து கோபமெல்லாம் காணாமல் போயிடுச்சு.

கதாநாயகியாகத் தேறுவீர்கள் என்று அப்பா அகத்தியன் சொன்னாரா?

தேறமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். நன்றாகச் செய்திருப்பதாகச் சொன்னார்.

அப்பாபோல டைரக்ஷன் பக்கம் வராமல், நடிப்பைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

டைரக்ஷன் பக்கம் வரமாட்டேன் என்று யாரு சொன்னது. கொஞ்சம் காலம் கதாநாயகியாக நடித்துவிட்டு திருமணம் முடித்துக் கொண்டு டைரக்ஷனில் முழு மூச்சாக இறங்குவேன்.

சிஸ்டர்ஸக்குள் சண்டை போட்டுக் கொள்வீர்களா?

ம். என் தங்கை நிரஞ்சனாவோடதான் அடிக்கடி சண்டை வரும். தலை பேண்டுக்கு ஹேர்பின்னுக்குன்னு சின்னச்சின்ன பொருட்களுக்குக்கூட சண்டை போட்டுக் கொள்ளுவோம்.

சொல்விளையாட்டில் கலக்குகிற உங்கள் அக்கா கார்த்திகா உண்மையிலேயே வீட்டிலேயும் நன்றாகத் தமிழ் பேசுவாரா?

பேசமாட்டார். மெட்ராஸ் பாஷை என்றால் நன்றாகப் பேசுவார். வெளியில சும்மா சீன் போடுறார்.

காமிரா முன்னால் விடியோ ஜாக்கியாகவே இருக்க விரும்புகிறீர்களா? கதாநாயகியாக இருக்க விரும்புகிறீர்களா?

கதாநாயகி. வி.ஜே.ன்னா வெரைட்டியே இருக்காது.

விஜய்.டிவியில் நடத்திய அழகிப் போட்டியில் ஸ்பையாக வேலை பார்த்தீர்களே. அதுபோல நிஜவாழ்க்கையிலும் ஸ்பையாக இருந்த அனுபவம் உண்டா?

இல்லை. அடுத்தவர் விஷயத்தில் மூக்கைக்கூட நுழைக்கமாட்டேன். காதல் விஷயத்திற்காகக்கூட தூது போனதில்லை.

நீங்கள் பொறாமையாகப் பார்க்கும் பெண் யார்?

அப்படி யாரும் இல்லை.

"காதல் போயின் சாதல்' -சரியா?

ஒரு காதல் முடிந்தால் அடுத்த காதலைத் தொடங்க வேண்டியதுதானே!

No comments: