ஆடுபுலி-ஆட்டம்
ஆடுபுலி (செய்தி): சிறையில் இருந்து தப்பிய 293 கைதிகளை ஹெலிகாப்டர் மூலம் தேடுகிறது சத்தீஷ்கர் அரசு:
ஆட்டம் (ஹி...ஹி): கண்ணைக் கட்டிக்கிட்டு 293 பேரைத் தேடணும்னா சிரமமாதானே இருக்கும்.
***
ஆடுபுலி (செய்தி): இந்திய விமான நிலையங்களைக் குண்டு வைத்து தகர்ப்போம் - தீவிரவாதிகள்.
ஆட்டம் (ஹி..ஹி): அதான் இ.மெயிலிலேயே போட்டாச்சே பயக் குண்டை!
***
ஆடுபுலி (செய்தி): நெல்லை மாநாடு மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது - வைகோ.
ஆட்டம் (ஹி...ஹி): ஆமாமாம்.... மக்கள் என்றாலும் வைகோ என்றாலும் இரண்டும் ஒன்றுதானே!
***
ஆடுபுலி (செய்தி) : பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு:
ஆட்டம் (ஹி..ஹி..): 'ஆட்சி ' பாதுகாப்பு ஆலோசனை நல்லா நடந்ததுங்களா....
****
No comments:
Post a Comment