Saturday, December 1, 2007

உப்புமா அழகி... உலக அழகியா?



2007-ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீன நாட்டைச் சேர்ந்த ஷாங் ஜிலினுக்குத் தமிழ் தெரியாது என்கிற முழு நம்பிக்கையுடனும், தமிழ் தெரிந்த யாரும் இந்தச் செய்தியைக் கடத்திக் கொண்டுபோய் அவரிடம் போட்டுக் கொடுக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடனும், குறிப்பாகப் பெண்கள் சொல்லவே மாட்டீர்கள் (சொல்லாதீர்கள் என்றால் சொல்லு... சொல்லு என்று அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.) என்கிற நம்பிக்கையுடனும், சீன தமிழ் வானொலி அறிவிப்பாளர்கள் யாராவது இதைப் படித்துவிட்டால் "ஷார்ட் டைம் மெமரி லாஸ்' தங்களுக்கு இருப்பதாக நினைத்து மறந்துவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டும் எழுதுகிறோம். அதுவும் இது நாங்கள் தனிப்பட்ட முறையில் எழுதுகிற கடிதம் இல்லை. சாட்சாத் பலருடைய மனசாட்சியைத் திறந்து வைத்து ஷாட்... காமிரா... ஆக்சன் சொல்லி எடுக்கப்பட்டதைத்தான் எழுதுகிறோம். பல மாவட்டக்காரர்களின் பேச்சு வழக்கில்தான் இதை முறைப்படி எழுதவேண்டும். எல்லோருடைய கருத்தும் ஒரே மாதிரியாக இருந்ததால், புத்தகத் தமிழிலேயே எழுதி விடுகிறோம். அதை நீங்கள் படிக்கிறபோது உங்கள் மாவட்டக் கொச்சைத் தமிழில் மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள்....

பொதுவா என்னா ஜொள்றாங்கன்னாப்பா.... வருஷத்துக்கு ஒரு மொற உலக அளகின்னு ஒரு பிகர சலக்ஷன் பண்றாங்க. இதுனால நமக்கு என்னாங்கற .... அதுகாட்டி ஜெயிச்சி உலகம்பூரா திரியுது.... ஏதோ ஜொள்வாங்களே... அதாம்பா ... அது பேருன்னா.... எய்ட்ஸ்க்குப் பிச்சாரம், கன்சருக்குப் பிச்சாரம்னு ஜெயிச்ச உடனே ஜொள்ளும்... அப்புறம் வெளியில வர்வே மாட்டுது... நம்ப சென்னைக்கு வந்தா தாம்பா வெளியல வந்தாமாதிரியே அர்ர்ர்த்தம். அப்புறம் ரெண்டு மூணு ஹாலிவுட் படத்துல நடிச்சுகிணு துட்டு பாக்குது.. அப்புறம் யாரையாவது இசுத்துக்கினு போயி செட்லாகுது... இந்த அளகிகளால நமக்கு என்ன புரயோசனம் ஜொள்ளு... ஒர்ரு தபா அளகி போட்டியையாவது நம்மல பாக்க வுடுறானுங்களா... அவுனுங்களே பாக்குறானுங்க... சலக்ஷன் பண்றானுங்க.... இன்னொன்னுப்பா கொஞ்சம் கூச்சமாதான் இருக்கு. இருந்தாலும் ஜொள்ரன். ஆசயாவே அந்த அளகி நம்மள பாத்தாலும் நமக்குப் புடிக்காதுப்பா... வத்தலா தொத்தலா பாக்கவே சகிக்கிலப்பா... டிவில பாக்கக்கோலியோ... அது உப்புமா அளகின்னு தெரிஞ்சுபுடுது... என்னதான் சொல்லுப்பா நம்ம இட்லிக் கடை முனியம்மா மாதிரி வர்மா. அதாம்பா நம்ப உலக அளகி. க்ரிக்டா..... (புத்தகத் தமிழில் எழுத மறந்துவிட்டோம்.)

முனியம்மாக்கள், கஸ்தூரியாக மாறுகிறார்கள். மலர்விழி, விஜி, நிரோஷா, நமீதா, ரேஷ்மா, கனிகா, ரம்யா, கீதா, லாவண்யா, மணிஷா, சுஜிதா, நீலவேணி, சந்திரிகா,......... நடிகை சினேகா என்று மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அவரவர் உலகிலும் அவரவருக்கு ஓர் உலக அழகி..

2 comments:

காயத்ரி சித்தார்த் said...

//அவரவர் உலகிலும் அவரவருக்கு ஓர் உலக அழகி..//

அது சரி! மேல இருக்க லிஸ்ட்ல முனியம்மா, சினேகா தவிர உங்க உலக அழகியும் இருக்காங்க போலிருக்கே?!! :)

(ஒரு வேண்டுகோள்.. இந்த வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துடுங்களேன்?)

மங்களூர் சிவா said...

//
இந்த அளகிகளால நமக்கு என்ன புரயோசனம் ஜொள்ளு... ஒர்ரு தபா அளகி போட்டியையாவது நம்மல பாக்க வுடுறானுங்களா... அவுனுங்களே பாக்குறானுங்க... சலக்ஷன் பண்றானுங்க....
//
அதுதானே!!