Monday, December 17, 2007

ஸ்கூலுக்கு 'கட்' அடிக்காத மம்மிகள்!

"நேத்தே லேட். மிஸ் ஒரே திட்டு. இன்னைக்காவது சீக்கிரம் போகணும். சீக்கிரம்... சீக்கிரம்' என எல்லோரிடமும் சிடுசிடுத்து... அரக்கப்பரக்க சாப்பிட்டு... தலையை வாராமலே புறப்பட்டு... பதட்டத்தில் சில நோட்டுப் புத்தகங்களை மறந்து... சிக்னலில் ரெட் லைட்டைக் கண்டாலே டிராபிக் போலீûஸக் கரிச்சிக்கொட்டி... "திபுதிபு'வென காரை விட்டு இறங்கி, விழுந்து எழுந்து மூச்சிரைப்போடு ஸ்கூலுக்குள் நுழைகிறபோது, "டீச்சர் பெயின்டிங் பண்ணச் சொல்லியிருந்தாங்களே... பண்ணவில்லையே என்ற ஞாபகம் வேறு வந்து மிரட்டும்.' -இந்தத் தொடர் பயமும் பதட்டமும் பள்ளிக்குச் செல்லும் ஒரு குழந்தைக்கானது அல்ல. குழந்தைகளைப் பள்ளியில் விட்டு வரும் மம்மிகளுக்கானது!

குழந்தைகளோடு குழந்தைகளாய் பள்ளிக்குச் செல்லும் மம்மிகள் அவர்கள் படிக்கிற காலத்தில்கூட இப்படிப் பதட்டத்துடன் பள்ளிகளில் நுழைந்திருக்க மாட்டார்கள். அம்மாக்கள் "மம்மி'களானதுபோல, குழந்தைகள் அழுகிறபோது அழுது, சிரிக்கிறபோது சிரிப்பது என்பது மட்டும் இருந்ததுபோய், ஹோம்வொர்க் செய்கிறபோது அவர்களுடனே ஹோம்வொர்க் செய்து, டிராயிங் பண்ணுகிறபோது, அவர்களோடு டிராயிங் செய்து... குழந்தைகளுக்காகவே ஒரு தேர்ந்த ஆர்ட் டைரக்டர் போல கலைப்பொருள்கள் செய்துகொடுப்பது வரை சகலமும் மம்மிகள்தான். (வழக்கம்போல பெரும்பாலான டாடிகள் இதிலிருந்து எஸ்கேப்!)
இப்படிச் சிரமப்படும் மம்மிகளில், "சொந்தச் சுமையைத் தூக்கித் தூக்கி சோர்ந்து போனேன்' என்று அலுப்பு தட்டிப் பாடுபவர்களும் உண்டு. "சுகமான சுமை' என்று சொல்பவர்களும் உண்டு. இங்கு சில மம்மிகளின் கமெண்ட்ஸ்!:

ஆர்த்தி




ஆர்த்தி, விஷ்ணுலட்சுமி - காருக்குள்ளே வீடு


என்னுடைய குழந்தை விஷ்ணுலட்சுமி பத்மா சேஷாத்திரில எல்கேஜி படிக்கிறா. அவதான் என்னோட உலகம். அவளுக்காக நான் எதையும் செய்வேன். நான் படிக்கிற காலத்தில என் அம்மா ஒண்ணு ரெண்டு முறை ஸ்கூலுக்கு வந்து சாப்பாடு கொடுத்துட்டுப் போயிருக்காங்க. அப்போ அது எனக்கு பெரிய சந்தோஷமா இருந்தது. அந்தச் சந்தோஷத்தை என்னுடைய குழந்தைக்குக் கொடுக்கணும்கிறதாலதான் நான் தினமும் அவளைச் சென்று பள்ளிக்கு விட்டுட்டு வர்றேன்.


என்னோட ஹஸ்பென்டும் எப்போவாது வந்து விட்டுட்டுப் போவார். இன்னொரு விஷயம், குழந்தைங்களை ஸ்கூல்லேர்ந்து திரும்ப கூட்டிட்டு வர்றப்பதான் அவர்களோடு முழுமையாய் நேரத்தைச் செலவிட முடிகிறது. அதற்காக வீட்டில் இருக்கிறபோது செலவிடமுடியவில்லை என்று அர்த்தமில்லை. வீட்டில் ஏதாவது வேலை செய்துகொண்டே அவங்க விளையாடுவதை ரசிப்போம். அல்லது ஏதாவது ஹோம்வொர்க் செய்யச் சொல்லிக்கொண்டிருப்போம். ஆனால் ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வரும்போது குழந்தைங்களோடு ஜாலியா பேசிட்டு வரமுடியுது.


என்னுடைய காரில் ஒரு வீடே இருக்குதுன்னுதான் சொல்லணும். குழந்தைங்களுக்குத் தேவையான எல்லா பொருட்களையும் காரோட டிக்கியில வைச்சிருக்கேன். குடையிலிருந்து, படுத்துத் தூங்கற பெட் வரை எல்லாம் எப்போவும் காரிலேயே வைச்சிருப்பேன். இப்படி நான் வைத்திருப்பதை எங்கள் வீட்டில்கூட கேலி செய்வார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அதைப்போல குழந்தைகளுக்குத் தேவையான பெயின்டிங் செய்து கொடுப்பவற்றையும் நான் சுமையா நினைக்கறதில்லை. குழந்தைங்களுக்குள் இருக்கிற திறமைகளை வெளிக்கொணரும் முயற்சியாத்தான் இதை நான் பார்க்கிறேன். சின்ன வயசில அவங்க செய்ய முடியாத வேலைகளை நாம செய்து கொடுக்கிறபோது அதைப் பார்த்தே அவங்க செய்யத் தொடங்கிடுவாங்க. போட்டி நிறைஞ்ச இந்த உலகில நம்ம குழந்தைங்கள நாமதானே முன்னுக்குக் கொண்டுவரணும்!

சுபஸ்ரீ




சுபஸ்ரீ, பிரேரணா


இதைப்போய் சுமைன்னு எந்த அம்மாவும் சொல்ல மாட்டாங்க. குழந்தைங்க மீது நாம வைச்சிருக்கிற அக்கறையத்தான் இது காட்டுது. என்னோட மகள் பிரேரணா எல்.கே.ஜிதான் படிக்கிறாள். இருந்தாலும், அவளை இப்போதிருந்தே எல்லா வகையிலும் தயார் செய்ய வேண்டியிருக்குது. நாட்டியம், யோகா என அனைத்தும் சொல்லிக்கொடுக்கிறோம். நான் படிக்கிற காலத்தில இப்படி என்னோட பேரண்ட்ஸ் கொண்டு வந்து விடலே. நான் என்னோட குழந்தைய ஸ்கூல்ல நேரடியா கொண்டு வந்து விடுறது மூலமா எந்தெந்த சப்ஜெக்டில வீக்கா இருக்கிறான்னு தெரியுது. அந்தச் சப்ஜெக்ட்ல அவளை அதிக கவனம் செலுத்த வைக்க முடியுது. அதேபோல என்னோட திறமைங்களை எல்லாம் என் குழந்தைக்கும் கற்றுக்கொடுக்கணும்னுதான், விதவிதமான ஹான்டிகிராப்ட்ஸ் செய்யுறதுக்கும் கத்துக் கொடுக்கறேன். நாளடைவில அவளே எல்லாவற்றையும் செய்வாள். குழந்தையா இருக்கும்போதுதான் நாம சில விஷயங்களை கத்துக்கொடுக்க முடியும். அவ பெரியவளாயிட்டா எங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை அவளிடம் திணிக்கமாட்டோம். அவள் விருப்பப்படிதான் படிக்க வைப்போம்.


கல்பனா


இதுபோல பள்ளி வந்து குழந்தைகளை அழைத்துச் செல்வது நல்ல விஷயம். குழந்தைகள் பள்ளிக்கு தனியாக வந்துவிடும் என்றாலும்கூட நாம் கொண்டுவந்து விடுகிறபோது ஒரு பாதுகாப்பு உணர்வு அவங்களுக்குக் கிடைக்குது. நாமளும் எந்தப் பதட்டமும் இல்லாமல் இருக்கலாம். குழந்தைகள் சிரமம் என்று எந்தப் பெற்றோரும் சொல்லமாட்டார்கள். அதுவும் படிப்பு விஷயத்தில் சொல்லவே மாட்டார்கள். குழந்தைகளின் ஹோம்வொர்க்கை சில பேரண்ட்úஸ செஞ்சுக் கொடுப்பாங்க. நான் சொல்லிக் கொடுப்பதோடு சரி. முன்புபோல் எல்லாம் இப்போது இல்லை. எதுக்கெடுத்தாலும் போட்டி நிறைஞ்ச உலகமா மாறிடிச்சு. இதில நம்ம குழந்தைங்க பெஸ்ட்டா வரணும்னா நம்மால முடிஞ்சதை அவங்களுக்கு செய்றது நல்லதுதானே. நாம, நம்பளோட இருபத்தெட்டு வயசில தெரிஞ்சுக்கிட்ட நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு இப்போதே சொல்லிக்கொடுப்பது நல்லதுதானே. இதைத்தான் எல்லாப் பேரண்ட்சும் செய்றாங்க. இதை "சுகமான சுமை'ன்னு கூட சொல்லக்கூடாது. "சுகம்'னுதான் சொல்லணும்.

No comments: