Thursday, December 13, 2007

இளையராஜா இசையில் பாடுவதற்குப் பயம்!



சொல்கிறார் சின்மயி

காம்பயராகவே மாறிவிட்டீர்கள் போலிருக்கிறதே?

அப்படிச் சொல்லமுடியாது. இது ஒரு சீசன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டும்தானே செய்கிறேன். இப்போதுகூட சிவாஜியில் பாடியிருக்கிறேன்.

விஜய் டிவியில் ஏர்டெல் ஜூனியர் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் பாடும் சுட்டீஸ்களைப் பார்க்கிறபோது என்ன தோன்றும்?

சமத்துப்பிள்ளைகள். விட்டால் எல்லோரையுமே இசையில் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.

"வாய்ஸ் கல்ச்சர்' குறித்து ஆராய்ச்சி செய்துவரும் உங்களுடைய அம்மா காம்பயர் செய்வதற்கு ஏதாவது ஏதிர்ப்பு தெரிவித்தாரா?

"வாய்ஸ் கல்ச்சர்' என்பது பாடுகிறவர்களுக்கு மட்டுமான ஒன்றல்ல. பேசுவது உட்பட எல்லாவகையான குரலோசைகளையும் ஆராய்ச்சி செய்வதுதான். காம்பயரிங் செய்வதற்கு அம்மா எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மேலைநாட்டில் பிறந்திருந்தால் "பாப்', "ராக்' என்று பாடி உலகம் முழுவதும் பிரபலமாக ஆகியிருக்கலாம் என்று நினைத்ததுண்டா?

இங்கே பிறந்தாலும் உலகம் முழுவதும் புகழ்பெறுவதற்கான தகுதிகளையும் யுக்திகளையும் வளர்த்துக்கொண்டால் அது சாத்தியம்.

யேசுதாஸ், ஜானகிபோல் இப்போதைய பாடகர்கள் யாரும் தனித்து அடையாளம் காணமுடியவில்லையே?

எல்லோருக்கும் தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் யாரும் அதிக ஆண்டுகள் பாடாததால் அப்படித் தெரியாமல் இருக்கிறது.

தினமும் முணுமுணுக்கும் பாடல்?

பாடகர்கள் யாரும் முணுமுணுக்க மாட்டார்கள். முணுமுணுத்தால் ஸ்ருதி போய்விடும். மனத்திற்குள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பாடல் ஒலிக்கும்.
சோலோ சாங் பாடத்தானே உங்களுக்கு அதிக விருப்பம்?
பாடல்களே குறைவாகக் கிடைக்கிறபோது தனிப்பட்ட விருப்பங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

டயட்டுக்கும் பாடுவதற்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? இளைத்துக் கொண்டே போகிறீர்களே?

நான் சாப்பிடுவதுபோல் யாரும் சாப்பிடமுடியாது. ஐஸ்க்ரீம் உட்பட எல்லாமும் ஒரு வெட்டுவெட்டுவேன். ஆனாலும் அப்படியேதான் இருக்கிறேன்.

பாடல்பதிவு காலையிலிருந்தால் குரல் சுகப்படுமா? மாலையிலா?

காலையில் எழுந்தவுடன் குரல் கனமாக இருக்கும். போகப்போகத்தான் இலகுவாகும். அதனால் மலைநேரம்தான் பாடுவதற்கு சுகம்.

யார் இசையில் பாடுவதென்றால் உங்களுக்குப் பயம்?

இளையராஜா சார். ஜீனியஸ். அவர் ஒன்றும் யாரையும் பயமுறுத்துவதில்லை. தன்னுடைய மகளிடம் எப்படி பேசுகிறாரோ அதைப்போலத்தான் என்னிடமும் பேசுகிறார். ஆரம்பத்தில் இருந்தே எல்லோரும் பயமுறுத்தியதாலோ என்னவோ ஒருவித பயம் இருக்கிறது.

2 comments:

poompozhil said...

காம்பயர் ஆனதிலிருந்து over glamourஆக உடையணிகிறீர்களே அது ஏன்?

த.அரவிந்தன் said...

நல்ல கேள்வி. அவரிடம் கேட்பது யார்?