தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
1.12.2007
செய்தி:
கேள்வி:
ஆரம்பத்தில் படிக்கையில் ஆச்சரியமாகத் தெரிந்தாலும் போகப்போக பல அதிர்ச்சிக் கேள்விகளைக் கேட்க வைக்கிறது இந்தச் செய்தி. அவசர மின்விளக்கு ஒன்றுகூடவா இல்லை மருத்துவமனையில்? மெழுகுவர்த்திக்கூடவா கிடைக்கவில்லை? கைப்பேசியை முடுக்கிவிட்டுவிட்டு பிரசவ அறையைவிட்டு யாரும் வெளியில் போயிருக்க முடியாது. ஏனென்றால் சில நொடிகள் இயங்காவிட்டாலும் கைப்பேசி அணைந்துவிடும். அதை அழுத்திக் கொண்டே இருந்தால்தான் வெளிச்சம் கிடைக்கும். அப்படியென்றால் அழுத்திக்கொண்டிருந்த பனிரெண்டு பேர் யார்? மருத்துவர்கள் தவிர்த்து வெளி நபர்கள் பிரசவ அறையில் இருப்பது மருத்துவச் சட்டப்படி குற்றம். தமிழகத்தில் ஒரு மருத்துவரின் பையன் பிரசவம் "பார்த்தது" தவறு என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இத்தனைக் கேள்விகளையும் இந்தச் செய்தி கேட்கிறது. எது எப்படியிருந்தாலும் அந்த ரஷ்ய குழந்தை நன்றாக இருக்கிறது என்பது பெரிய சந்தோஷம்.
7 comments:
பகிர்வுக்கு நன்றி ,
ஆனால் இதை அவர்களது , புத்திசாலித்தனம் , என்று கூட கூறலாம்.... இயலாமை யாக கூட இருக்கலாம்..
இதில் ஒரு ஆச்சரியம் , என்னவென்றால் , இதை ஒரு தமிழ் திரை படத்தில் , காட்சியாக பார்த்ததாக ஞாபகம் , என்னவென்று சொல்வது அவ்வியக்குநரின் , எதிர்கால ஞானத்தை.....
விரைவில் அதை பற்றி கூற வருகின்றேன்..
என்னோட மொபைலில் extra>flash light>on என்ற ஒரு வசதியில அடிக்கடி அழுத்தாமலேயே பேக்டரி தீரும்வரை எரியும் வசதி இருக்குங்க. வெளிச்சத்தின் பிரகாசத்தையும் தேவைக்கேற்ப்ப தேர்ந்தெடுக்க முடியும். ஒருவேளை அவர்கள் ,இதை பயன்படுத்தி இருக்கலாமோ?.
http://bruno.penandscale.com/2007/12/phones-help-deliver-baby.html
அப்படியென்றால் அழுத்திக்கொண்டிருந்த பனிரெண்டு பேர் யார்?
"Quick-thinking nurses" 12 Phones were used. Not 12 persons were inside the room
மருத்துவர்கள் தவிர்த்து வெளி நபர்கள் பிரசவ அறையில் இருப்பது மருத்துவச் சட்டப்படி குற்றம்.
Is it. Which Law. :) :) :)
What is the definition of " வெளி நபர்கள்"
What about the "Birth Companion Scheme"
தமிழகத்தில் ஒரு மருத்துவரின் பையன் பிரசவம் "பார்த்தது" தவறு என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
1. Seeing a delivery is different from Conducting a delivery
கிடைக்கும் சந்தர்பங்களில் ("சைக்கிள் கேப்"பில்) எல்லாம் ஆதாரமிலாமல் மருத்துவத்துறையினர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தும் போக்கு தமிழ் வலையுலகில் அதிகரித்து வருகிறது... இது கவலைப்பட வேண்டிய விஷயம்
முழு செய்தியும் http://bruno.penandscale.com/2007/12/phones-help-deliver-baby.html என்ற சுட்டியில் உள்ளது
மருத்துவத்துறையையோ, மருத்துவர்களையோ களங்கப்படத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல: உண்மையாகச் சேவை செய்கிற மருத்துவர்கள் அனைவருமே உயர்வானவர்கள்.
//உண்மையாகச் சேவை செய்கிற மருத்துவர்கள் அனைவருமே உயர்வானவர்கள்.//
Thanks for understanding
Post a Comment