விளம்பரங்களுக்கும் தணிக்கைக் கத்திரி!
"ஒரு பொருளின் மற்ற அம்சங்கள் மாறாமலிருக்கும்போது அந்தப் பொருளின் விலை குறைந்தால் தேவை (demand) அதிகரிக்கும். விலை அதிகரித்தால் தேவை சுருங்கும்' - இது பொருளாதார நிபுணர் மார்ஷல் தரும் "தேவை' இலக்கணம்.விலையைப்போலவே பொருட்களின் தரமும் ஒரு காலகட்டத்தில் தேவையை நிர்ணயித்தன. தற்போது போட்டி உலகம். குப்பைமேனி கீரை விற்பது முதல், விமானப் பொருட்கள் விற்பது வரை போட்டி நிலவுகிறது.போட்டியைச் சமாளிக்க விற்பனையாளர்கள் விளம்பரங்களைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். விளம்பர மகுடிகளுக்கு ஆடும் பாம்புகளாக நுகர்வோரும் மாறி, பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் தற்போது விளம்பரங்கள் பொருட்களின் தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளாகிவிட்டன.தூர்தர்ஷன் காலத்தில் திரைப்பட ஒளிபரப்பின்போது, நாற்பத்தைந்து நிமிடங்களுக்கொரு முறை ஐந்து நிமிடங்கள் விளம்பரங்கள் வரும். இதற்கே பார்வையாளர்கள் சலித்துக் கொள்வார்கள். விளம்பரங்கள் வரும்போது எழுந்துவிடுவார்கள்.தற்போதைய தனியார் தொலைக்காட்சிக் காலத்தில் பத்து நிமிடங்களுக்கொரு முறை, விளம்பரங்கள். ஆனால் பார்வையாளர்கள் படங்களைவிடவும் விளம்பரங்களையே விரும்பிப் பார்க்கிறார்கள். காரணம் நகைச்சுவையைத் தூண்டும் சில விளம்பரங்கள்.இந்த விளம்பரங்கள் கொடுப்பதிலும் விற்பனையாளர்களிடையே போட்டி ஏற்பட்டதனாலோ என்னவோ விளம்பரங்களில் ஆபாசம் அதிகரித்து உள்ளன.ஆபத்தான உடலுறவு, உயிரையே அணுஅணுவாய் உறிஞ்சிக் கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகத்துடன் அல்லது, உருக்குலைந்த ஒரு மனிதரைக் காட்டி ஆணுறை அணியுங்கள் என்று எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் விளம்பரம் இருக்கவேண்டும். இதைவிடுத்து ஆங்கிலப் படங்களையே மிஞ்சும் ஆபாச உடலுறவுக் காட்சிகளைக் காட்டி இதுபோன்ற இன்பம் நீடிக்க ஆணுறை அணியுங்கள் என்று காட்டப்படுகிறது. இந்த விளம்பரங்களைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கவேண்டிய சூழல் எல்லோருக்கும் இருக்கிறது.பள்ளிகளிலேயே பாலியல் கல்வி வைக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. எனவே இதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். பள்ளியில் பாலியல் கல்வியைத்தான் சேர்க்கச் சொல்கிறார்களே தவிர, பாலியலை யாரும் சொல்லிக் கொடுக்கப்போவதில்லை. ஆணுறை விளம்பரங்கள் மட்டுமல்ல; அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் குறித்த விளம்பரங்களிலும் ஆபாசக் காட்சிகளின் அரங்கேற்றம்தான்.கேபிள் டி.வி. சட்டத்தின்படி காலை ஆறு மணி முதல் இரவு பதினொரு மணிவரை ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது. இதைக் கண்காணிக்கிற பொறுப்பு காவல்துறை அதிகாரிகளுடையதாகும். ஆனால் அவர்கள் படங்கள், நாடகங்கள் போன்றவற்றையே கண்காணிக்கிறார்களே தவிர விளம்பரங்களைக் கண்டு கொள்வதில்லை.ஆபாச விளம்பரங்களுடன் பெண்ணைப் போகப் பொருளாகச் சித்திரிக்கும விளம்பரங்கள் எண்ணற்றவை. ஆண்கள் அணியும் பனியன் விளம்பரங்களுக்கும் பெண்கள்தான் கருப்பொருள். இதைப் பெண்ணிய அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை.ஓரிடத்தில் ஈவ்டீசிங் நடக்கும்போதே, பாலியல் பலாத்காரத்துக்குப் பெண் உள்ளாகும்போதோ ஓங்கிக் குரல் கொடுக்கும் பெண்ணிய அமைப்புகள், அதற்கு மூலவேர்களாக விளங்குகின்றவற்றை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புவது முக்கியம்.இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் பெண்களைப் பார்க்கும்போது, பெண்ணைக் கொண்டே பெண்ணைச் சிதைக்கிற ஆண்களின் தந்திரம் வெட்டவெளிச்சமாகிறது. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களில் மட்டும்தான் இந்த ஆபாசம் என்றில்லை. சென்னை நகரின் முக்கிய சாலைகளில் பெரிய பேனர்களில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் இதே அலங்கோலம்தான். இந்த விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவர்களால் நிகழ்ந்த விபத்துகளைச் சொல்லி மாளாது.மேற்குவங்க மாநிலத்தில் சினமாச் சுவரொட்டிகள்கூட மாநிலத் தணிக்கைச் (சென்சார்) குழு ஒப்புதல் பெற்ற பிறகே ஒட்ட இசை அளிக்கப்படுகிறது.ஆனால் இங்கு நாம் காணும் நிலை வேறு வகை. எனவே ஈவ்டீசிங், பாலியல் பலாத்காரம், ஆபாசக் காட்சிகளைக் கட்டுப்படுத்த விளம்பரங்களுக்கும் தணிக்கைக் கத்தரிக்கோல் அவசியம் தேவை.' - இது பொருளாதார நிபுணர் மார்ஷல் தரும் "தேவை' இலக்கணம்.விலையைப்போலவே பொருட்களின் தரமும் ஒரு காலகட்டத்தில் தேவையை நிர்ணயித்தன. தற்போது போட்டி உலகம். குப்பைமேனி கீரை விற்பது முதல், விமானப் பொருட்கள் விற்பது வரை போட்டி நிலவுகிறது.போட்டியைச் சமாளிக்க விற்பனையாளர்கள் விளம்பரங்களைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். விளம்பர மகுடிகளுக்கு ஆடும் பாம்புகளாக நுகர்வோரும் மாறி, பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் தற்போது விளம்பரங்கள் பொருட்களின் தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளாகிவிட்டன.தூர்தர்ஷன் காலத்தில் திரைப்பட ஒளிபரப்பின்போது, நாற்பத்தைந்து நிமிடங்களுக்கொரு முறை ஐந்து நிமிடங்கள் விளம்பரங்கள் வரும். இதற்கே பார்வையாளர்கள் சலித்துக் கொள்வார்கள். விளம்பரங்கள் வரும்போது எழுந்துவிடுவார்கள்.தற்போதைய தனியார் தொலைக்காட்சிக் காலத்தில் பத்து நிமிடங்களுக்கொரு முறை, விளம்பரங்கள். ஆனால் பார்வையாளர்கள் படங்களைவிடவும் விளம்பரங்களையே விரும்பிப் பார்க்கிறார்கள். காரணம் நகைச்சுவையைத் தூண்டும் சில விளம்பரங்கள்.இந்த விளம்பரங்கள் கொடுப்பதிலும் விற்பனையாளர்களிடையே போட்டி ஏற்பட்டதனாலோ என்னவோ விளம்பரங்களில் ஆபாசம் அதிகரித்து உள்ளன.ஆபத்தான உடலுறவு, உயிரையே அணுஅணுவாய் உறிஞ்சிக் கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகத்துடன் அல்லது, உருக்குலைந்த ஒரு மனிதரைக் காட்டி ஆணுறை அணியுங்கள் என்று எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் விளம்பரம் இருக்கவேண்டும். இதைவிடுத்து ஆங்கிலப் படங்களையே மிஞ்சும் ஆபாச உடலுறவுக் காட்சிகளைக் காட்டி இதுபோன்ற இன்பம் நீடிக்க ஆணுறை அணியுங்கள் என்று காட்டப்படுகிறது. இந்த விளம்பரங்களைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கவேண்டிய சூழல் எல்லோருக்கும் இருக்கிறது.பள்ளிகளிலேயே பாலியல் கல்வி வைக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. எனவே இதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். பள்ளியில் பாலியல் கல்வியைத்தான் சேர்க்கச் சொல்கிறார்களே தவிர, பாலியலை யாரும் சொல்லிக் கொடுக்கப்போவதில்லை. ஆணுறை விளம்பரங்கள் மட்டுமல்ல; அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் குறித்த விளம்பரங்களிலும் ஆபாசக் காட்சிகளின் அரங்கேற்றம்தான்.கேபிள் டி.வி. சட்டத்தின்படி காலை ஆறு மணி முதல் இரவு பதினொரு மணிவரை ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது. இதைக் கண்காணிக்கிற பொறுப்பு காவல்துறை அதிகாரிகளுடையதாகும். ஆனால் அவர்கள் படங்கள், நாடகங்கள் போன்றவற்றையே கண்காணிக்கிறார்களே தவிர விளம்பரங்களைக் கண்டு கொள்வதில்லை.ஆபாச விளம்பரங்களுடன் பெண்ணைப் போகப் பொருளாகச் சித்திரிக்கும விளம்பரங்கள் எண்ணற்றவை. ஆண்கள் அணியும் பனியன் விளம்பரங்களுக்கும் பெண்கள்தான் கருப்பொருள். இதைப் பெண்ணிய அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை.ஓரிடத்தில் ஈவ்டீசிங் நடக்கும்போதே, பாலியல் பலாத்காரத்துக்குப் பெண் உள்ளாகும்போதோ ஓங்கிக் குரல் கொடுக்கும் பெண்ணிய அமைப்புகள், அதற்கு மூலவேர்களாக விளங்குகின்றவற்றை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புவது முக்கியம்.இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் பெண்களைப் பார்க்கும்போது, பெண்ணைக் கொண்டே பெண்ணைச் சிதைக்கிற ஆண்களின் தந்திரம் வெட்டவெளிச்சமாகிறது. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களில் மட்டும்தான் இந்த ஆபாசம் என்றில்லை. சென்னை நகரின் முக்கிய சாலைகளில் பெரிய பேனர்களில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் இதே அலங்கோலம்தான். இந்த விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவர்களால் நிகழ்ந்த விபத்துகளைச் சொல்லி மாளாது.மேற்குவங்க மாநிலத்தில் சினமாச் சுவரொட்டிகள்கூட மாநிலத் தணிக்கைச் (சென்சார்) குழு ஒப்புதல் பெற்ற பிறகே ஒட்ட இசை அளிக்கப்படுகிறது.ஆனால் இங்கு நாம் காணும் நிலை வேறு வகை. எனவே ஈவ்டீசிங், பாலியல் பலாத்காரம், ஆபாசக் காட்சிகளைக் கட்டுப்படுத்த விளம்பரங்களுக்கும் தணிக்கைக் கத்தரிக்கோல் அவசியம் தேவை.

No comments:
Post a Comment