Saturday, November 24, 2007

கொட்டாவியை விரட்டும் மிட்டாய்கள்!



கொட்டாவியை விரட்டும் மிட்டாய்கள்!
(24.11.2007)



கருதுதல்

வேடர் இருவர் தனி விமானத்தை அமர்த்திக் கொண்டு விமான ஓட்டியிடம், காட்டுப் பகுதிக்குள் கொண்டுவிடுமாறு வேண்டினர். இரண்டு வாரம் கழித்து, அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல, விமானம் வந்தது. விமான ஓட்டி, அவர்கள் வேட்டையாடி உள்ள காட்டெருமைகளைப் பார்த்துவிட்டு, ""இந்த விமானத்தில் ஒரு காட்டெருமையைத்தான் கொண்டு செல்லமுடியும். மற்றொன்றை இங்கேயே விட்டுவிடுங்கள்"" என்றான்.சென்ற ஆண்டு, இரண்டையும் எடுத்துச் செல்ல, அந்த விமான ஓட்டி அனுமதித்ததாகக் கூறினார். விமான ஓட்டிக்குச் சந்தேகமாக இருந்தது. ""அப்படியானால் கொண்டு செல்வோம்"" என்றான். விமானம் மூன்று பேரையும், இரண்டு காட்டெருமைகளையும் சுமந்துகொண்டு புறப்பட்டது.உயரப்பறக்கும் முன்னரே, அது பக்கத்திலுள்ள, குன்றில் வீழ்ந்தது. அந்த வேடர்கள் வெளியே சுற்றுமுற்றும், பார்த்தனர். ஒருவன், மற்றவனிடம், ""நாம் எங்கிருக்கிறோம்?'' என்று கேட்டான். மற்றவன், சுற்றுப்புறத்தை ஆராய்ந்து பார்த்து, ""சென்ற ஆண்டு எந்த இடத்தில் விமானம் நொறுங்கியதோ, அங்கிருந்து இடதுபக்கம், இரண்டு மைல் தூரத்தில் இருப்பதாக நினைக்கிறேன்"" என்றான்.


ஒரு காலுக்கு மட்டுமா?

மருத்துவர்: "உன் கால்வலிக்குக் காரணம் தள்ளாத வயதுதான்."
நோயாளி: " என்னை முட்டாளாக நினைத்து விடாதீர். என் மற்றொரு காலுக்கும் அதே வயதுதான்."

நூல்:தவளையின் வழிபாடு; அந்தோனி டி.மெல்லோ: தமிழில்: பா.ஜெயக்ஷ்மி.

1 comment:

cheena (சீனா) said...

இந்த வேடர்களையும் நோயாளிகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது ? முடிவெடுக்க வேண்டியவர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்.