Thursday, December 20, 2007

என்னத்தைக் கிழித்துவிட்டார் விஜயகாந்த்?



சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வு பிரிவு நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர்த்து காங்கிரசுடன் தேமுதிகவும் சேர்ந்து 3-வது அணி உருவானால் அது பெரும்பான்மையான மக்களின் பேராதரவைப் பெறும் என்று தெரியவந்துள்ளதாம்.
அதைப்போல விஜயகாந்த் கட்சி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக 47.9 சதவிதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனராம்.
இந்த ஆய்வை எத்தனை பேரிடம் நடத்தியிருக்கிறார்கள் தெரியுமா?

பல்வேறு கிராமங்கள், நகரங்களில் 3,281 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு? 10 கோடியை நெருங்குகிற நிலையில் இருக்கிறது. இதில் ஒரு தெருவில் இருக்கிற ஜனத்தொகை அளவில் கருத்துக்கணிப்பை நடத்திவிட்டு விஜயகாந்திற்குச் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

எல்லா இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றே எடுத்துக் கொள்வோம். கருத்துக் கணிப்பு நடத்திய நபர்கள் சந்தித்த பெரும்பாலானோர் விஜயகாந்த் கட்சியாகவே இருந்துவிட்டால்? விஜயகாந்த் ஜெயிக்கத்தானே செய்வார்.

அரசியலில் இருக்கிற நடிகர்களில் விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் பேர் விஜயகாந்த் நல்லவர் வல்லவர் என்று சொல்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

அப்படி இருப்பதற்கான காரணம் என்ன? விஜயகாந்தை நல்லவர் வல்லவர் என்று சொல்வதற்கு காரணம் என்ன?

விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பாக எந்தப் பிரச்சினைக்காக தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தியிருக்கிறார் சொல்லுங்கள்?
சரி... கட்சி தொடங்கிய பிறகு மட்டும்தான் புதிதாக என்ன சாதித்துவிட்டார்?
ஒரே குட்டையில் ஊறின மட்டைபோல வழக்கமாக அரசியல்வாதிகள் விடும் விதண்டாவாத அறிக்கைதானே விட்டுக்கொண்டிருக்கிறார்.
அதைவிடுங்கள்... இவருடைய தொகுதியில்தான் மற்ற அரசியல்வாதிகளைவிட என்ன புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து மக்களுக்குச் சேவை செய்து வருகிறார்.?

ஆட்சி பொறுப்பில் இருந்தால் செய்வார் என்றுதானே சொல்கிறீர்கள்?
இந்த வாதத்தை ஒத்துக்கொள்ளுவோம். அப்படியானால் விஜயகாந்த் ஒன்றுமே செய்யாமல் அவரை எப்படி நல்லவர், வல்லவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?

சினிமாவில் நடிக்கும்போதே விஜயகாந்த் ஏழைபாழைகளுக்கு நிறைய செய்திருக்கிறார் என்பீர்கள். அப்படித்தானே? சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதை எப்போதுதான் மறக்கப்போகிறீர்களோ?... தெருவில் பிச்சைக்காரருக்கு நீங்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் போடுவீர்களா? மாட்டீர்களா? போடாதவனை விட்டுவிடுங்கள். போடுவீர்கள்தானே. அது உங்கள் வருமானத்துக்கு உட்பட்டு செய்வது. விஜயகாந்துக்கு வருமானம் அதிகம். அவர் அதற்குத் தகுந்தாற்போல் செய்திருப்பார் அவ்வளவுதானே... (இதற்கும் மனசு வேண்டுமே என்று சொல்லக்கூடிய நபராக இருந்தால் நீங்கள் ஒரு ரூபாய் கூட பிச்சைக்காரனுக்குப் போடாத நபராக இருக்க வேண்டும்.) எனவே பத்து ரூபாய் கொடுத்தார். இருபது ரூபாய் கொடுத்தார் என்பதை வைத்து மனிதரை எடை போடாதீர்கள். செயல்பாடுகள் மூலம் எடைபோடுங்கள்.
செயல்பாட்டை எப்படி எடை போடுவது? வாய்ப்பு கொடுத்தால்தானே எடை போடமுடியும்?

நியாயமான கேள்விதான். மக்கள் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து போராடிய ஓர் இளைஞன் கட்சியைத் தொடங்கி எனக்கு ஆதரவு தாருங்கள் என்று சொன்னால், அது நியாயமாக இருக்கும். நீங்களும் வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம். அதைவிட்டு, தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை சினிமாவில் நடித்து சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்துவிட்டு, எல்லாத் தேவைகளும் நிறைவேறிய பிறகு கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்க ஆசைபடுகிறவருக்கு ஆட்சி பொறுப்பை விட்டுக் கொடுப்பது எப்படி நியாயமாக இருக்கும்?

ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம்போல ஆட்சியில் இல்லாத போதே ஓரளவு செய்திருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இன்னும் செய்வார் என்றுதானே சொல்ல வருகிறீர்கள். சரி ஒத்துக்கொள்ளுவோம். இந்த ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம்போல அவருடைய இப்போதைய செயல்பாடுகளையும் பார்க்க வேண்டாமா?

ஊழல்வாதிகளுக்கு என் கட்சியில் இடம் இல்லை என்றார்... இப்போது எத்தனைபேர் அவருடைய கட்சியில் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள் தெரியுமா? (நீதிமன்றம் தீர்ப்பு வழங்காதவரை... குற்றவாளிகள் மீது யாரும் குற்றம் சாட்டாதவரை யாரையும் ஊழல்வாதிகள் என்று சொல்லமுடியாது என்று விஜயகாந்த் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகப் பதில் தரலாம்.)

வாரிசு அரசியல் என்கிறோம்... விஜயகாந்த் கட்சியை இப்போது நிர்வகித்துக் கொண்டிருப்பது யார். அவர் சொந்தங்கள் பந்தங்கள்தானே......?

எனவே, செம்மறியாட்டு கூட்டம்போல் யார் பின்னாலும் ஓடிக்கொண்டிருக்காதீர்கள்.... இவன் சொன்னால் அவன் சொன்னான் என்பதற்காக எவரையும் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.....
(இது என் கருத்து. மாற்று கருத்துக்கும் இடம் உண்டு.)

7 comments:

SurveySan said...

//பல்வேறு கிராமங்கள், நகரங்களில் 3,281 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு? 10 கோடியை நெருங்குகிற நிலையில் இருக்கிறது. இதில் ஒரு தெருவில் இருக்கிற ஜனத்தொகை அளவில் கருத்துக்கணிப்பை நடத்திவிட்டு விஜயகாந்திற்குச் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
//

இதுக்கு முன்னாடி அவங்க எடுத்த கருத்துக் கணிப்பெல்லாம் கரெக்டா இருந்துதான்னு விசாரிச்சு பாருங்களேன்?

கருத்துக் கணிப்புன்னாலே 100% ஆளுங்ககிட்டு போடறதில்ல. அது உண்மையான தேர்தல்.
கொஞ்சம் பேருகிட்ட கேட்டு, மத்தவங்க முடிவை கணிப்பதுதான் 'கருத்துக் கணிப்பு' :)

த.அரவிந்தன் said...

சொல்வது சரிதான். ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் பார்க்கலாம். உலகத்துல உள்ள எல்லோரும் வைக்கிற எல்லா உலைக்கும் எங்கையாவது ஒரு பானையில பதம் பார்க்க முடியாது.

அரியாங்குப்பத்தார் said...

தமிழ்நாட்டை தமிழர் அல்லாதோரே தொடர்ந்து ஆளவேண்டும்...
அதுவும் அவன் அடிமுட்டாளக இருக்கவேண்டும்...
என்று தமிழ்நாட்டு ஊடக வேசிகள் கடந்த 40 ஆண்டுகளாக பெருமுயற்சி எடுத்து தொடர்து வெற்றிபெற்று வருகிறார்கள்.

இப்படிப்பட்ட அடி முட்டாள்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால்தான் பார்ப்பன பனியாக் கூட்டங்களும்... பன்னாட்டு நிறுவனங்களும்... பெருமுதலாளிகளும்... தெலுங்கு, சேட்டு மார்வாடிகளும் தமிழ்நாட்டை சுரண்ட முடியும் என்பது அவர்களின் வேட்கை...

தமிழினம் எப்போதுதான் விழித்தொழப்போகிறதோ...

த.அரவிந்தன் said...

உங்களைப் போல் பலர் கொதித்து எழுகிறபோது...

Darren said...

//எனவே, செம்மறியாட்டு கூட்டம்போல் யார் பின்னாலும் ஓடிக்கொண்டிருக்காதீர்கள்.... இவன் சொன்னால் அவன் சொன்னான் என்பதற்காக எவரையும் நல்லவர் வல்லவர் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.....///

mmm..Nice but no ______________?

-L-L-D-a-s-u said...

//
சினிமாவில் நடிக்கும்போதே விஜயகாந்த் ஏழைபாழைகளுக்கு நிறைய செய்திருக்கிறார் என்பீர்கள். அப்படித்தானே?//
1) எம்.ஜி.ஆர் , வி.சி.கணேசன் இருவருக்குமுள்ள அரசியல் வெற்றி வித்தியாசங்களை கொண்டு, அரசியலுக்கு வர நினைக்கின்ற நடிகர்கள் செய்வது .

2) நல்ல முதலீடு ..விளம்பரம். நல்ல விளம்பரத்திற்கு இவர்கள் செய்யும் உதவி (செலவு), மிகக்குறைவே.

3)வருமான வரி ஏய்ப்புக்கு இந்த உதவிகள் எவ்வளவு தூரம் உதவுகிறது எனபதையும் பார்க்கவேண்டும்

த.அரவிந்தன் said...

உண்மையான கருத்து.