Sunday, December 9, 2007

சிறுவயது காதலிக்கு ஓட்டுப் போட்டு உதை வாங்கியவர்


ஆவலுடன் நீங்கள் எதிர்பார்த்த, பெரும் பரபரப்புடன் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. (எவன் எதிர்பார்த்தான் என்று திரும்பக் கேட்டுவிட மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையுடன்....)

உலக அழகி யார்? என்று ஷாங் ஜிலின், சிநேகா அல்லது வேறு நடிகை, மனைவி, சிறுவயது காதலி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில் முடிவுகளை நீங்கள் மேலே பார்த்தாலே தெரிந்துவிடும். (போட்டதே 51 பேர்தான்... அதனால ஓட்டா சொல்லாம சதவிதமா சொல்றோம்)

சிநேகா அல்லது நடிகைகள் டெபாசிட் இழந்து தோற்றுப் போயினர். ஒரு ஓட்டு கூட நடிகைகளுக்குக் கிடைக்கவில்லை. (புல்லரிச்சுப் போச்சு... , நம்முடைய வலைநேயர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள்... ஒருவேளை தங்களுக்குப் பிடிச்ச நடிகை பேரைப் போடவில்லை என்று கோபமா?)

அடுத்ததா உண்மையான உலக அழகி ஷாங் ஜிலினும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டார். அவரும் டெபாசிட் இழந்துபோனார். அவருக்குக் கிடைத்தது வெறும் 5 சதவிதம் ஓட்டுதான். இவருக்கு ஓட்டுப் போட்டவர்கள் அநேகமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் போலிருக்கிறது. மதிப்பெண் எங்காவது குறைந்துபோய்விடுமோ என்று பயந்து கொண்டு போட்டிருக்கலாம்.

தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது போட்டியிட்ட மனைவி அணி. இந்த அணியினருக்கு 31 சதவித வாக்குகள் கிடைத்திருக்கிறது. வலைநேயர்களின் மனைவிகள் அருகிலேயே இருந்து கணவர்களின் காதைத் திருகிப் போட வைத்திருக்கலாம். ஒரு சிலர் உண்மையாகவும் போட்டிருக்கலாம்.

இறுதியில் வெற்றிப்பெற்றது சிறுவயது காதலிகள்தான். இவர்களுக்குக் கிடைத்தது 62 சதவித ஓட்டுகள். பழைய காதலியை மறக்கமுடியாமல் எத்தனை பேர் தவிக்கிறீங்க.... ஒருவேளை அந்தப் பொண்ணே இப்போது கிடைத்திருந்தாலும், படாதபாடுதான் படுத்தியிருப்பீங்க அவங்களை.... திருமணமாகாத சில பேரு சிறுவயது காதலிக்குப் போட்டிருப்பீங்க.... அதுல உங்க டீச்சர் அப்படிஇப்படின்னு யாரையாவது நினைச்சுப் போட்டிருந்தீங்கன்னா அது மன்னிக்க முடியாத குத்தம். உண்மையான காதலியையே நினைச்சுக்கிட்டு போட்டிருந்தீங்கன்னா... அதுபோலவே வேற காதலியைத் தேடுங்க.... கிடைக்காதுதான்... அதுக்காக கூட்டைக் கலைக்காதீங்க.....

பொண்ணுங்க யாராவது ஓட்டுப் போட்டிருந்தீங்கன்னா அவுங்களுக்கும் இந்தத் தத்துவம் பொருந்துங்கோ. (இப்பத்தான் கண்டதும் தத்துவமா போச்சே). கொஞ்சம் மாத்திக்க வேண்டியது உங்க கையிலதான் இருக்கு.
சரி.... சரி....

சிறுவயது காதலிக்கு ஓட்டுப் போட்டு அடி வாங்குனது யாருன்னுதானே கேட்குறீங்க...

வாங்குனுவங்க யாருன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி... அடி வாங்குனவங்க மனைவிக்கிட்ட வாங்குன வசவைத் தெரிஞ்சுக்கிறீங்களா?
பொண்டாட்டி கையால சோறு வாங்கித் தின்னுட்டு, காதலிக்கா ஓட்டுப் போடுற.... உன்னலாம் கட்டிவெச்சு உரிக்கணும். ஏன் அவக்கிட்டேயே போய் சோறு வாங்கித் திங்க வேண்டியதுதானே.... (நல்லாதான் இருக்கும்) உன்னையே வேணாம்னுதான அவ எங்கையோ இருக்கா? ......
மானம் கருதி இதோடு நிறுத்திப்போம்.... இன்னும் கிடைத்த திட்டுகளை நீங்க கேட்க வேணாம்.

இந்தத் திட்டுகளையும், உதைகளையும் வாங்கிய நேரத்தில்தான், "கும்மியடித்து வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் மொக்கை போட்டுக் கிடப்பார்' தத்துவப் புகழ் காயத்ரி இந்த ஓட்டு முறையே வேணாம்னு சொல்லியிருந்தாங்க... இதே நிலையில் மங்களூர் சிவா... போட்டிக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ஏற்கனவே தாவரம் அடிவாங்கிவிட்டதால் தேர்தலைத் தொடர வேண்டியதா போய் விட்டது.
தாவரத்தைப்போலவே யாராவது அடி வாங்கியிருந்தா... எனக்கு என்னைப்போல ஒருத்தரைப் பார்த்த சந்தோஷம்.

No comments: