Monday, December 21, 2009

மௌனப் பொம்மைகள்

மௌனத்தில் சதா புரளும்
மிருகப் பொம்மைகள்
எல்லோர் வீடுகளையும்
அழகால் அலங்கரிக்கின்றன
பேசாத அவற்றோடு
பழகுதல் எல்லோருக்கும் சுலபம்
ஆகாயத்துக்கும் அடிதரைக்கும்
விட்டெறிந்து பிடிக்கையிலும்
விழு வலியற்று
அமைதியாய்ப் பறப்பவை
எட்டி உதைத்து
காதைக் கடித்து
கண்களைக் குழந்தைகள் தோண்டினாலும்
வாஞ்சையாய் வால்களை ஆட்டுபவை
சொல்லப்படுகிற ரகசியங்களால்
முடியுதிர்க்குமே தவிர
தனிமையின் கதவுகளைக்கூட
தட்டிச் சொல்லாதவை
அணைத்துப் பாய்ச்சப்படும்
துர்கனவு வெப்பத்தைச்
முழுதாய்க் கிரகித்து
எவர் மீது உரசாமல்
பூமிக்குள் செலுத்தி செயலிழக்கச் செய்பவை
அத்தோடு
இரத்தம் குடிக்கும்
ஒட்டுண்ணிகளும் இல்லாதவை.

நன்றி: மணல்வீடு

5 comments:

யாத்ரா said...

இந்தக் கவிதை என்னென்னவோ உணர்வுகளைக் கிளர்த்துகிறது

//அத்தோடு
இரத்தம் குடிக்கும்
ஒட்டுண்ணிகளும் இல்லாதவை.//

என்ன சொல்வது,,,,,

பத்மா said...

sila samyam nangalum intha bommaigalai polathan ....
melirunthu keezhe erinthalum vali kaatathu sirikum jenmangal..
ithai melaum viruvu patutha thondrugirathu..
ungal kavithai nalla inspiration..
padma

த.அரவிந்தன் said...

யாத்ரா, பத்மா - இருவருக்கும் நன்றி

na.jothi said...

மௌனங்களை கலைக்கும் மௌனப்பொம்மைகள்
அருமை

த.அரவிந்தன் said...

நன்றி ஜோதி அவர்களே