Monday, October 31, 2011
ராணி எறும்பு
28
முதலில் ஒரு எறும்பு வந்தது. அடுத்து மூன்று எறும்புகள், பத்து எறும்புகள், முப்பது எறும்புகள், நூறு எறும்புகள் எனச் சீரற்ற வரிசையில் வந்தன. புதருக்கு அருகில் குழந்தை விறைத்து கிடந்தது. கை, கால், தலை, வாய், கண், வயிறு, இடுப்பு ஆங்காங்கே கலைந்தேறி எறும்புகள் புற்றுக்கு இழுத்து வந்தன. முட்டைகளைச் சுமந்திருந்த ராணி எறும்பு தன் ஆறு கால்களையும் அசைத்து வந்து குழந்தையை ருசித்தாள். வயிறு நிரம்பியதும் மற்றவற்றை உண்ண அனுமதித்தாள். காத்திருந்த வேலைக்கார எறும்புகள் அடுத்து மொய்த்தன. எல்லாவைக்குள்ளும் குழந்தை கரைந்து போனது. உண்ட மயக்கம் தெளிவதற்குள் அனைவரையும் அழைத்து ராணி உத்தரவிட்டதன் பேரில் ருசி கொண்ட எறும்புகள் புதர்தோறும் இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்கின்றன. குழந்தை கிடைக்காதபோது வாய் பிளந்து கிடக்கும் பெண்களை இழுத்து வருகின்றன.
Subscribe to:
Posts (Atom)