

ஷில்பாஷெட்டி - சர்ச்சை ஷெட்டி!
சர்ச்சை என்று பெயரை மாற்றி வைத்துக்கொள்ளலாம் நடிகை ஷில்பா ஷெட்டி. பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் ஜேடேகூடேவுடன் சர்ச்சை; ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கூரே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சர்ச்சை என்று ஆரம்பித்த சர்ச்சைகளே இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் கிளம்பிவிட்டது அவர் குறித்து புது சர்ச்சை. இந்த சர்ச்சையும் மையம் கொண்டிருப்பது லண்டனிலேயே. வருகிற டிசம்பர் 12}ந்தேதி, லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில், "மிஸ்.பாலிவுட்' என்னும் பெயரில் மியூசிக்கல் ஸ்டேஜ் ஷோ ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளார் ஷில்பா. பரதநாட்டியம் கற்றுக்கொண்டு பாலிவுட்டில் நுழையும் பெண், சினிமா நடனக்கலை கற்றுக்கொண்டு, ஐரோப்பிய நாடுகளில் பாலிவுட் நாட்டியத்தைப் பிரபலப்படுத்துகிறார் என்பதுதான் "மிஸ். பாலிவுட்' கதையாம். கிட்டத்தட்ட ஷில்பாஷெட்டியின் கதைபோல். இந்த ஷோ குறித்த அறிவிப்பு வெளியான உடனே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. லண்டன் வாசிகள் டிக்கெட்

No comments:
Post a Comment