Thursday, November 29, 2007

குஷ்பு செருப்பு....வருதா வெறுப்பு?







குஷ்பு காலு....
குஷ்பு செருப்பு...
உங்களுக்கு எதுக்கு வெறுப்பு?



தேநீர் செய்திகள்?
தேள் கடி கேள்விகள்!
(29.11.2007)



செய்தி:




இந்து முன்னணி அமைப்பின் கும்பகோணம் நகர பொதுச் செயலாளர் குருமூர்த்தி மற்றும் அதன் பொறுப்பாளர்கள் இணைந்து கும்பகோணம் 2}வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் பாபுலால் முன்பு ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளனர். அதில்:"28.11.2007 தேதியிட்ட ஒரு வார இதழைப் படித்தபோது அதில் குஷ்பு முப்பெரும் தேவியர் சிலைகள் மற்றும் முப்பெரும் தேவியரின் திருஉருவங்களுக்கு பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்கள் ஆகியவற்றை அவமதிக்கும் வண்ணம் முப்பெரும் தேவியரின் திரு உருவ விக்கிரகங்களுக்கு அருகில் நாற்காலியில் காலணியுடன் கால்மேல் கால்போட்டு அமர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் அதில் பிரசுரமாகி உள்ளது.குஷ்புவின் இந்தச் செயல் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வண்ணமாக அமைகிறது. இந்து கடவுள்களின் திரு உருவ சிலைகள் பூஜிக்கப்படும் இடங்களில் ஆன்மீக சம்பிரதாயங்கள், வேதங்களின்படி அனுசரிக்கப்படவேண்டும்.முப்பெரும் தேவியர் இந்துக்களால் குறிப்பாக தமிழ் மக்களால் போற்றி வணங்கப்படும் தெய்வங்களாவர். இந்தத் தெய்வ திரு உருவ சிலைகளையும், தெய்வ திருஉருவ சிலைகளுக்கு புனித பொருட்களையும் அவமானப்படுத்துவது இந்து சமயத்தையே அவமானப்படுத்தும் செயலாகும்.இந்தச் செயல்கள் இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 295, 295ஏ, மற்றும் 296படி குற்றமாகின்றன.வழிபாட்டுத்தலம், வழிபாட்டுக்குரிய தெய்வ திரு உருவங்களை அவமதிக்கும் வண்ணம் குஷ்பு செயல்பட்டுள்ளதால் அவரை நீதிமன்றத்தார் சம்மன் செய்து விசாரித்தும், மனுதாரர் தரப்பு சாட்சிகளை விசாரித்தும் மற்றும் மனுதாரர் தரப்பு ஆவணங்களைப் பரிசீலனை செய்தும் தகுந்த உத்தரவிடவேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



கேள்வி:



இந்துக்கள் மனதை அல்ல; எந்த மதத்தினர் உட்பட யாருடைய மனதையுமே புண்படுத்தக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், இந்துக் கடவுளை அவமதித்ததாகச் சொல்லி வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்தால், இவர்கள் ஏதோ குஷ்புவைக் கொண்டு புகழ் பெறுவதற்காக வெளியிட்டதாகத் தெரிகிறது. ஏதோ நிகழ்ச்சியில் அமர்ந்திருக்கிறார் குஷ்பு. அவர் பின்புறம் தெய்வச்சிலை. இப்புகைப்படம் ஒரு பூஜை நிகழ்ச்சியின்போது எடுத்திருக்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது எடுத்து இருக்கலாம். குஷ்பு அமர்ந்திருக்கிற இருக்கைக்கு அருகிலேயே வேறு சில இருக்கைகள் இருக்கின்றன. அதில் அமர இருந்தவர்கள் யார்? ஒரு நிகழ்ச்சிக்கு விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால், அவர்களை நிகழ்ச்சி நடத்துகிறவர்கள்தான் இருக்கையை ஒதுக்கி விருந்தினர்களை அமர வைப்பார்கள். அப்படித்தான் குஷ்பு அமர வைக்கப்பட்டிருப்பார் என்று அந்தப் புகைப்படத்தைப் பார்க்கிறபோது தெரிகிறது. இவர்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்குமானால் குஷ்பு தன் கால் மீதுதானே கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அதில்தானே அவரது செருப்பு இருக்கிறது. இந்தப் பூமியை தெய்வம்தான் படைத்தது என்கிறதுபோது தெய்வம் எல்லா இடத்திலேயும்தானே இருக்கிறது. அப்படியானால் செருப்பே போடாமல்தானே இருக்க வேண்டும்? இந்த வாதத்தை பகுத்தறிவு வாதமாக நாத்திக வாதமாக எடுத்துக் கொண்டால்,விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.கேட்ட வரங்கள் கொடுக்காத வெறியில் ஏறிமிதித்து விநாயகர் சிலையை அடித்து உடைப்பதுபோல் அல்லவா அந்தக் காட்சிகளைப் பார்க்கிறபோது இருக்கிறது. தூள்தூளாக்கி கடலில் கரைக்கவில்லையா? இப்படி அடித்து உதைத்து விநாயகரைக் கரைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கவில்லையா? இன்றைக்கு அதே நீதிமன்றத்தில் தெய்வத்தை அவமதித்ததாக வழக்கும் தொடருகிறீர்கள்? இருந்தாலும் செருப்பைப் போட்டுக் கொண்டு.... என்று இழுக்கிறீர்களே.... தெய்வ அவதாரமான இராமனே செருப்பு போட்டுக்கொள்ளவில்லையா? அந்தச் செருப்பை கழற்றி வாங்கி இராமன் அமர்ந்து ஆட்சி புரிய வேண்டிய இடத்தில் வைத்து பரதன் ஆட்சி செய்யவில்லையா?
(அதற்காக குஷ்பு செருப்பைச் தெய்வச் செருப்பு என்று சொல்லவரவில்லை. குஷ்பு இட்லி என்று சொல்வதற்காகவே அந்த இட்லியை விரும்பிச் சாப்பிடுவதும் இல்லை.)

No comments: