Tuesday, June 30, 2009

போகாத சாலையின் அழைப்பு

வழக்கமாய்
போய் வருகிற
சாலைகளுக்கு
அப்பாலும் இருக்கின்றன
பல சாலைகள்

போகாத சாலைகள்
எப்போதும்
தங்கள் வசீகரங்களால்
அழைக்கின்றன

இயலாமை
வெயிலாகவும்
ஆசை
வாடைக் காற்றாகவும்
என்னிலிருந்து
நீங்கிப் போய்
பரவுகிறது
போகாத சாலைகளில்

ஏதோவொரு சாலையில்
ஏதோவொரு வனப்பில்
எதேச்சையாய்
வந்து சேர்வதுண்டு
தொலைந்த கண்கள்.

நன்றி: உயிரோசை

3 comments:

கலையரசன் said...

அருமையான கவிதை நடை!
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

த.அரவிந்தன் said...

ஊக்கப்படுத்துகிறீர்கள். நன்றி

த.அரவிந்தன் said...

ஊக்கப்படுத்துகிறீர்கள். நன்றி