பல்லி பொல்லாதது.
வீட்டில் தனித்திருப்பது தெரிந்ததும்
மேல் தளத்திலிருந்து பக்கவாட்டுச் சுவருக்கு
நகர்ந்து வந்து
சந்தோஷச் சத்தமெழுப்பி அழைக்கிறது.
வராந்தா, வெளியறை, உள்ளறை, சமையலறையென
எங்குப் போனாலும்
பிடிக்க
பின்னாலேயே வருகிறது.
திரும்பிப் பார்த்து முறைத்தால்
போவதுபோல் போய்
அலமாரி, பாத்திரக்கூடை, அஞ்சறைப்பெட்டி, குளிர்பதனப்பெட்டி
மறைவுகளில் நின்று
ஓரக்கண்ணால் உற்றுப் பார்க்கிறது.
அசந்து படுக்கையில்
நேர் மேலாக
தளத்துக்கு வந்து
காற்று துணியை விலக்குகையில்
நாக்கை நீட்டிநீட்டி
சப்புக் கொட்டுகிறது.
காகிதத்தைச் சுருட்டி அடித்தால்
பயந்ததுபோல் ஓடுவது
குளியலறையில்
சோப்பு தேய்த்து குளிக்கிற கணம்
எங்கிருந்தோ வந்து மேலே பாய்கிறது.
நன்றி: ஆனந்தவிகடன்
வீட்டில் தனித்திருப்பது தெரிந்ததும்
மேல் தளத்திலிருந்து பக்கவாட்டுச் சுவருக்கு
நகர்ந்து வந்து
சந்தோஷச் சத்தமெழுப்பி அழைக்கிறது.
வராந்தா, வெளியறை, உள்ளறை, சமையலறையென
எங்குப் போனாலும்
பிடிக்க
பின்னாலேயே வருகிறது.
திரும்பிப் பார்த்து முறைத்தால்
போவதுபோல் போய்
அலமாரி, பாத்திரக்கூடை, அஞ்சறைப்பெட்டி, குளிர்பதனப்பெட்டி
மறைவுகளில் நின்று
ஓரக்கண்ணால் உற்றுப் பார்க்கிறது.
அசந்து படுக்கையில்
நேர் மேலாக
தளத்துக்கு வந்து
காற்று துணியை விலக்குகையில்
நாக்கை நீட்டிநீட்டி
சப்புக் கொட்டுகிறது.
காகிதத்தைச் சுருட்டி அடித்தால்
பயந்ததுபோல் ஓடுவது
குளியலறையில்
சோப்பு தேய்த்து குளிக்கிற கணம்
எங்கிருந்தோ வந்து மேலே பாய்கிறது.
நன்றி: ஆனந்தவிகடன்
6 comments:
நல்ல கவிதை...
எழுதியது யார்?
நான் முடிவை சற்று மாற்றி இருக்கிறேன் எப்படி இருக்கிறது என்று சொல்கிறீர்களா?
குளியலறையில்
சோப்பு தேய்த்து குளிக்கிற கணம்
எங்கிருந்தோ வந்து மேலே பாய்கிறது.
இருந்தாலும் நான்
ஐயோ பல்லி என்று
சத்தம் போடவில்லை..
என்னுடைய கவிதைதான். உங்கள் கற்பனையை ரசித்தேன்.
நல்ல கவிதைங்க, மயாதியின் கற்பனையையும் ரசித்தேன். எனக்கும் பல்லியாருடன் நெருக்கமான உறவு உண்டு.
நன்றி
ரசித்தேன். நன்றாக இருக்கிறது.
நன்றி முத்துவேல். உங்கள் கவிதைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்
Post a Comment