மணல்வீடு கட்டி
குழந்தைகள் விளையாடுகிறார்கள்
ஒரு விண்ணப்பப் படிவத்தில்
பெயரில்லாத
ஒரு பெயரை
தகுதியில்லாத
ஒரு தகுதியை
நிரந்தரமில்லாத
ஒரு முகவரியை
நம்பிக்கையாய்
ஒருவன் பூர்த்தி செய்கிறான்
மணல்வீடு கட்டி
குழந்தைகள் விளையாடுகிறார்கள்.
நன்றி: உயிரோசை
நன்றி: உயிரோசை
4 comments:
சார், இந்த கவிதை மிக மிக மிக மிக பிடிச்சிருக்கு..
நன்றி!
கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
நன்றி
Post a Comment