Saturday, May 30, 2009

வெளியேறும் பாடல்கள்


கறுப்புவெள்ளை
கட்டைகளுக்குப் பின்னே
பலநூறு பாடல்கள்
வெüவால்களாய்த் தொங்கிக்கொண்டிருந்தன
பிடித்தவொரு பாடலைத் தேர்ந்து
அவன் இசைக்கத் தொடங்க
மற்ற பாடல்கள்
வெளியேறி
பறந்து போயின
மற்ற கீபோர்டுகளுக்கு.

நன்றி: உயிரோசை

4 comments:

Karthikeyan G said...

Super!!

யாத்ரா said...

அருமை

த.அரவிந்தன் said...

நன்றி. யாத்ரா சார்.... உங்களுடைய கவிதைகளையும் தொடர்ந்து படிக்கிறேன்.

யாத்ரா said...

ஐயோ எதுக்குங்க சார் லாம், யாத்ரா னு பேர் சொல்லி கூப்பிடுங்க.