பேருந்தில் இடம்பிடித்து
வைத்திருப்பதுபோல
வாழ்த்து அட்டையில்
இடம் ஒதுக்கி
நண்பர்கள் காத்திருக்கிறார்கள்
மண்டபத்திற்குள் நுழைவதற்குள்ளே
மாலையிலிருந்து கொட்டிய
இதழ்களெல்லாம் திரும்ப அறிவிக்கிறார்கள்
'இவர் கவிஞர்
கவிதை எழுதப் போகிறார்'
வியர்த்து சிரித்து
காற்புள்ளியைக்கூட
இட இயலாது திணறுகிறபோது
கண்டுகொள்கிறோம்
என்னை அவர்களும்
கவிதையை நானும்
அவர்களைக் கவிதையும்.
நன்றி: உயிரோசை
4 comments:
உயிரோசையிலேயே வாசித்தேன், நன்றாயிருந்தது
பகிர்வுக்கு நன்றி
கவிதையை செய்யத்தெரியாதவர்கள் நவீன கவிஞர்கள், நல்ல கவிஞர்கள்.
கவிதை இயல்பாய் வரவேண்டும். நல்ல கவிதை, அனுபவம்.
பகிர்வுக்கு நன்றி
Post a Comment