Saturday, December 19, 2009

வலையுலக நண்பர்களுக்கு


'குழிவண்டுகளின் அரண்மனை' என்ற என்னுடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பு நானே வெளியிட்ட தொகுப்பாகும். புத்தகக் கண்காட்சியில் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களுக்கு ஆதரவு அளிப்பதுடன் இதற்கும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
த.அரவிந்தன்

தலைப்பு: குழிவண்டுகளின் அரண்மனை
த.அரவிந்தன்
பக்கம்: 80
ரூ. 40

தொகுப்புக்கு சுகுமாரன் அளித்த முன்னுரையின் சிறுகுறிப்பு:

அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள். இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன.

(சுகுமாரனின் முழு மதிப்புரையை பின்னர் வெளியிடுகிறேன்)

9 comments:

Karthikeyan G said...

Sir, Can i have the publication name pls..

த.அரவிந்தன் said...

இத்தொகுப்பு நானே வெளியிட்டதாகும். வெளியீடு அருந்தகை

Karthikeyan G said...

In which stall, Can i get this book during this book fair?

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள் நண்பரே..

த.அரவிந்தன் said...

நன்றி கார்த்திகேயன். பாரதி புத்தகாலயம், பரிசல் கடைகளில் நிச்சயம் கிடைக்கும்.மற்ற கடைகள் விவரம் தற்போது தெரியவில்லை. பிறகு சொல்கிறேன்.

த.அரவிந்தன் said...

நன்றி முனைவர் குணசீலன் அவர்களே

த.அரவிந்தன் said...

நன்றி யாத்ரா

குப்பன்.யாஹூ said...

wishes and congrats.

Please also write about publication name or book store name where we can buy your books.

த.அரவிந்தன் said...

நன்றி குப்பன் யாஹு

வெளியீடு:

அருந்தகை
E-220
12-வது தெரு
பெரியார்நகர்
சென்னை-82

புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும்.